'இள்' என்னும் வேர்ச்சொல்
சைவுகேடு = 1. பொருத்தமின்மை. 2. கருமத் தவறு.
=
27
இசைகுடிமானம் = நாட்டுக்கோட்டைச் செட்டியாரால் எழுதப் பெறும் திருமண ஒப்பந்தம்.
இசையோலை = ஒப்பந்த வோலை.
இயை- (எய்) - ஏய்.
ஏய்தல் (செ. குன்றியவி.) = 1. பொருந்துதல். “ஏய்ந்த பேழ்வாய்” (திவ். பெரியதி. 1: 7: 3). 2. தகுதல். "தில்லையூரனுக்கின் றேயாப்பழி" (திருக்கோ.374).
(செ.குன்றாவி.) = 1. ஒத்தல். 'சேலேய் கண்ணியரும் ” (திவ். திருவாய். 5: 1: 8) 2. எதிர்ப்படுதல். “ஏயினா ரின்றி யினிது” (ஐந்.ஐம். 11).
ஏய்த்தல் (செ. குன்றா வி.) = 1. பொருந்தச் சொல்லுதல். "பொய்குறளை யேய்ப்பார்” (பழ. 77). 2. ஒத்தல். 'அல்லிப்பாவை யாடுவனப் பேய்ப்ப” (புறம். 33: 17) 3. ஏமாற்றுதல்.
ஏய = ஓர் உவமவுருபு.
ஏய்ப்ப = ஓர் உவமவுருபு.
ஏய்வு = உவமை (திவா).
(தண்டி.33)
(தொல். பொருள் 290)
(திவா.)
ஏயான் = ஒரு தொழிலைச் செய்தற்குத் தகாதவன்.
"மாவலியை யேயா னிரப்ப"
(திவ். பெரியதி. 1:5:6)
ஏய் - ஏ = உம்மைச் சொற்போல் எண்ணுப்பொருளில் வரும் ஓர் இடைச்சொல்.
எ-டு: இரண்டேகால்- (எண்ணல்)
கழஞ்சே குன்றி- (எடுத்தல்)
கலனே பதக்கு - (முகத்தல்)
முழமே விரல் - (நீட்டல்)
"தோடே மடலே ஓலை யென்றா”
"நிலமே நீரே தீயே.”
(தொல்.1586)
இயை என்னும் சொல்லின் திரிபான ஏய் என்னும் சொற்குப்
பொருந்தல் அல்லது கூடுதற்பொரு ளுண்மையால்,
அதன்