32
வேர்ச்சொற் கட்டுரைகள்
உப்பு = பொருமியெழும் உவர்மண், உப்புக்கல்.
உம்பர் = 1. மேல், மேலே. 'யான்வருந்தி உம்பரிழைத்த நூல்வலயம்” (பெரியபு, கோச்செங். 5). 2. மேலிடம். “மாடத்தும்பர்” ஞானா. 9, 6). 3. வானம். "உம்ப ருச்சியிற் கதிர்பரப்பு கடவுள்' (திருவிளை. தண்ணீர். 29). 4. தேவருலகம். "உம்பரிற் கிடந்துண்ண” (நாலடி. 37). 5. தேவர். M. umbar. "ஒலியடங்கு முலகாளு மும்பர்தாமே” (திவ். பெரியதி. 7: 8 : 10).
உம்பரார் = தேவர்.
6
"உம்பரார்க்கு முரைப்பருந் தகைய ரானார்" (சீவக. 1678)
உம்பன் = உயர்ந்தோன்.
“உம்பரீச ரும்பன்”
(ஞானா. பாயிரம். 7: 4)
உம்பர்- உம்பரம் - அம்பரம் = வானம்.
உம்பல் = 1. எழுச்சி (பிங்.). 2. யானை (உயரமான விலங்கு). “யானைக் கமர ரும்பல்” (திருவள்ளுவ. 36).
உமண் = உப்புமண், உப்பு.
உயர் = உயரம், உயர்வு, உயர்த்தி, உயர்ச்சி. M. uyar.
உவ்வி = தலை (திவா.)
உவண் = மேலிடம்.
(சீவக.2858)
உவணம் = 1. உயர்ச்சி (திவா.). 2. பருந்து, கலுழன். “உயரவுயரப் பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகுமா?” (பழமொழி).
கலுழன்- கருட (வ.)
உவணன் = பருந்து, கலுழன் (திவா.)
உவணம் - சுவணம் - சுபர்ண (வ.)
உவணை = தேவருலகம்.
=
“ஆதரித் துவணைமே லுறைந்தான்”
உவர் = மேலெழும் உப்பு, உவர் நிலம்.
உவப்பு = உயரம் (பிங்.)
உவர்- இவர். இவர்தல் = உயர்தல்.
"விசும்பிவர்ந் தமரன் சென்றான்”
உவச்சன் = காளியை ஏத்தும் பூசாரி.
=
(சேதுபு. விது. 54)
(சீவக. 959)