'உ' என்னும் வேர்ச்சொல்
உவச்சன் = ஓச்சன்.
உறி = உயரக் கட்டித் தூக்கும் தொடர். உன்னுதல் = மேலெழுதல்.
ளர்தல் = ஏறிச்செல்லுதல்.
ஊர்தி = ஏறிச் செல்லும் விலங்கு, பறவை, வண்டி முதலியன.
“ஊர்தி வால்வெள் ளேறே”
மோனைத் திரிபு
உ
-
(புறம்.1)
33
ஒ ஓ. ஒய்யாரம் = 1. உ ள்ளத் துயர்ச்சி. 2. அட்டோலகம்
(ஆடம்பரம்)
ஒயில் = 1. ஒய்யார நடை. 2. குதித்தாடும் கும்மிவகை. ஓங்குதல் = உயர்தல்.
ஓங்கு- ஓக்கு (பிறவினை). ஓக்கு - ஓக்கம் = உயர்ச்சி, பெருக்கம். ஓங்கல் = 1. உயர்ச்சி. 2. எழுச்சி. 3. மலை. 4. யானை.
ஓச்சுதல் =உயர்த்துதல்.
ஓச்சம் = உயர்வு.
“வெவ்வர் ஓச்சம் பெருக”
(பதிற். 41:20)
ஓவர் = ஏத்தாளர்.
ஓவரும் பாட’
(சீவக.1844)
பக்கத் திரிபு
உ -அ. உம்பரம் - அம்பரம்.
அண் = மேல், மேல்வாய். அண்ணம் = மேல்வாய்.
அண்ணன் = மேலோன், மூத்த உடன்பிறந்தோன்.
அண்ணல் = தலைவன், அரசன்.
அண்ணாள்வி = அண்ணாவி = வினையாட்டுத் தலைவன்.
=
அண்ணாத்தல் = மேனோக்குதல், தலைநிமிர்தல்.
=
அணத்தல் = தலையெடுத்தல்.
அணர்தல் = மேனோக்கிச் செல்லுதல்.
அணர் = மேல்வாய்ப்புறம்.