'உல்' என்னும் வேர்ச்சொல்
"ஒண்ணுதற் கோஒ உடைந்ததே”
ஒள்- ஒள்ளி = வெள்ளி (சுக்கிரன்), செம்பொன்.
53
(குறள்.1081)
ஒள்ளிமை = அறிவு விளக்கம்.
ஒள்ளியன் = அறிவுடையோன்.
"ஒளியார்முன் ஒள்ளிய ராதல்
(குறள்.714)
ஒள்ளியோன் = வெள்ளி (சுக்கிரன்)
ஒள்ளொலி = மிக்கவொளி.
ஒள் -ஒப்பு-ஒட்பம் = அறிவு.
"கல்லாதா னொட்பம் கழியநன் றாயினும்” (குறள். 454) ஒள் - ஒளி = வெளிச்சம், மின்னல், கதிரவன், திங்கள், உடு, நெருப்பு, வெயில், விளக்கு, கண், அறிவு, புகழ் பெருமை, கடவுட்டன்மை.
K. ola, M. oli.
ஒளியவன் = கதிரவன்.
ஒளி - ஒளிர் - ஒளிறு.
ஒளிர்தல் = விளங்குதல்.
"உள்ளத் தொளிர்கின்ற வொளியே”
(திருவாச. 37, 5)
ஒளிறுதல் = விளங்குதல்.
"ஒளிறுவாள் மறவரும்”
(LDGCLD. 1: 68)
உல் - எல் = 1. நெருப்பு. 2. ஒளி. 3. கதிரவன். “எற்படக் கண்போல் மலர்ந்த” (திருமுருகு. 74). cf. Gk. helios, sun. 4. வெயில் (பிங்.). 5. பகல். "எல்லடிப் படுத்த கல்லாக் காட்சி” (புறம். 170). 6. நாள் (பிங்.)
=
எல் - எல்லவன் = 1. கதிரவன். “எல்லவன் வீழு முன்னம்” (பாரத. பதினெட். 119). 2. திங்கள் (அக. நி.). எல்- எல்லார் = தேவர். "பனிவானத் தெல்லார் கண்ணும் ’” (சீவக. 364). எல்- எல்லோன் = கதிரவன் (பிங்.)
எல் - எல்லி = 1. கதிரவன் (பிங்.) 2. பகல். “இரவோ டெல்லியு மேத்துவார்” (தேவா. 344:8).
எல்லினான் = கதிரவன்.
"புயங்கமுண் டுமிழ்ந்த வெல்லினான்" (கந்தபு. அக்கினி. 223)