54
எல்- எர்- எரி.
வேர்ச்சொற் கட்டுரைகள்
எரிதல் = 1. சொலித்தல் (சுவாலித்தல்). "எரியுந் தீயொடு" (திவ். திருவாய். 3 : 6 : 5). 2. விளங்குதல் (பிரகாசித்தல்). “எரியுஞ் செம்பொன் மணிமுடி” (சூளா. மந்தி. 6). 3. எரிச்சலுண்டாதல். 4. பொறாமைப்படுதல். 5. மனம் வருந்துதல். 6. சினத்தல். 7. முதிர்தல். “எரிகின்ற மூப்பி னாலும்” (கம்பரா. மருத்து. 17).
T. eriyu, K. uri, M.eri, Tu. eri.
எரி = நெருப்பு, ஒளி, அளறு (நரகம்)
எரி = நெருப்புநிறம், சிவப்பு.
எரிநகை = வெட்சிமலர்.
"எரிநகை யிடையிடு பிழைத்த நறுந்தார்” (பரிபா. 13 : 59) எரிப்பூ = செம்மலர்.
"எரிப்பூம் பழனம்"
(புறம்.249)
எரிமலர் = 1. முருக்கமலர். “எரிமலர்ப் பவளச் செவ்வாய்” (சீவக. 2741). 2. செந்தாமரை. “செல்வ னெரிமலர்ச் சேவடியை” (சீவக. 2741).
= 1.
எர் எரு. எருமணம் = செங்குவளை (பிங்.). எரு - எருவை குருதி (திவா.). 2. செம்பு. “எருவை யுருக்கினா லன்ன குருதி" (கம்பரா. கும்பக. 248). 3. உடல் சிவந்திருக்கும் பருந்து. “விரும்பா டெருவை பசுந்தடி தடுப்ப” (புறம். 64: 4).
நெருப்புச்சிவந்திருப்பதால் நெருப்புக் கருத்தில் சிவப்புக் கருத்துத் தோன்றுமென்பதை, அழல்வண்ணன், தீவண்ணன் செந்தீவண்ணன் முதலிய சிவன் பெயர்களால் உணர்க.
“அழல்வண்ணன்”
(தேவா. 1055: 5)
“தீவண்ணர் திறமொருகாற் பேசா ராகில்"(தேவா. 1230 : 6)
எல் - என்று = கதிரவன்.
“என்றைத் தொடவிண்ணி லெழுந்துறலால்”
(கந்தபு. விந்தகிரி. 4)
என்று - என்றூழ் = 1. கதிரவன். “என்றூழ் மாமலை மறையும்” (குறுந். 215) 2. வெயில். "என்றூழ் நின்ற குன்றுகெழு நன்னாட்டு" (சிலப். 14 : 121). 3. கோடைக்காலம். “என்றூழ் வாடு வறல்போல” (புறம். 75).