56
வேர்ச்சொற் கட்டுரைகள்
அருணமலை = நெருப்புப் பிழம்பாய் நின்றதாகக் கூறப்பெறும் =
செம்மலை.
அருணமலை - அண்ணாமலை (திருவண்ணாமலை).
அருணம் - அருணன் = புறப்படும்போது சிவந்து தோன்றும்
கதிரவன்.
அர் - அரத்தம் = 1. சிவப்பு. “அரத்த வேணியர்” (கந்தபு. முதனா. 82). 2. குருதி. “அரத்தமுன் டொளிரும் வாளவுணர்” (நைடத. நௗன்தூ. 14). 3. பவழம் (திவா.) 4. செம்பருத்தி. 5. செம்பரத்தை. 6. செங்கழுநீர். 7. செவ்வாடை வகை. 8. அரக்கு (திவா.)
அரத்தம்- அரத்தன் = செவ்வாய்க்கோள் (பிங்.) அரத்தம் - அரத்தகம் = செம்பஞ்சுக் குழம்பு.
"அரத்தக மருளச் செய்த சீறடி”
இனி, அலத்தகம் - அரத்தகம் என்றுமாம்.
அரத்தம் (குருதி) – Skt. rakta.
(சீவக. 2459)
அரத்தம் (சிவப்பு) - OE, read, OS. rod, E. red, OHG. rot, ON. rauthr, Coth. rauths, L. rufus, rubeus.
ஓவிய வேலைப்பாடமைந்த செந்நிறப் பட்டாடை பண்டை நாளில் அரத்தப் பூம்பட்டாடை யெனப்பட்டது.
“அரத்தப் பூம்பட் டரைமிசை யுடீஇ" (சிலப்.14:86)
வடமொழியிலுள்ள சொற்களெல்லாம் வடசொல்லேயென்று டைக்காலத்தில் ஒரு தவறான கருத்து மக்கள் மனத்தில் வேரூன்றி யிருந்ததினால், அரத்தம் என்னும் தென்சொல்லின் வடசொல் வடிவான ரக்த என்பதையே மூலமாகக் கொண்டு, அதைத் தமிழ் முறைக்கேற்ப இகரம் முன்னிட்டு இரத்தம் எனச் சொல்லவும் எழுதவும் தலைப்பட்டனர். இது, அரங்கன் என்னும் தென்சொல்லை ரங்கன் என்னும் வடசொல் வடிவின் திரிபாகக் கொண்டு, இரங்கன் என்று தமிழில் தவறாக எழுதுவ தொத்ததே. திவாகரம் (8 ஆம் நூற்றாண்டு), பிங்கலம் (10ஆம்
நூற்றாண்டு?), சூடாமணி (16ஆம் நூற்றாண்டு) முதலிய
சொற்றொகுதிகள் (நிகண்டுகள்) இடைக் காலத்தனவாதலின், அவற்றுள்ளும் இரத்தம் என்னும் வடிவு இடம்பெற்றுள்ளது. இது பிற்கால இலக்கியங்கள் அவ் வடிவை யாள இடந்தந்துவிட்டது. ஆயினும், இது மொழிநூலறிவாராய்ச்சி மிக்க காலமாதலாலும், இலக்கிய வழுவைக் களைதற்கு ஒரு கால வரம்பின்மையானும், இனி, தனிச்சொல்லாயினும்