'உல்' என்னும் வேர்ச்சொல்
57
தொடர்ச் சொல்லாயினும் இரத்தம் என்னும் வடிவை அரத்தம் என்றே சொல்லாகக் கொண்டு இருவகை வழக்கிலும் பெரும்பான்மையாக வரும் தொடர்ச்சொற்கள் அரத்தக்கட்டி, அரத்தக்கட்டு, அரத்தக் கண்ணன், அரத்தக் கலப்பு, அரத்தக் கவிச்சு, அரத்தக் கழிச்சல், அரத்தக் கறை, அரத்தக் கனப்பு, அரத்தக் காட்டேறி, அரத்தக் காணிக்கை, அரத்தக் குழல், அரத்தக் குழாய், அரத்தக் குறைச்சல், அரத்தக் கொதிப்பு, அரத்தக் கொழுப்பு, அரத்தக் கோமாரி, அரத்தக் குமுதம், அரத்தக் குன்மம், அரத்தச் சிவப்பு, அரத்தச் சுரப்பு, அரத்தச் சுருட்டை, அரத்தச் சூறை, அரத்தப் பலி, அரத்தப் பழி, அரத்தப் பிண்டம், அரத்தப் பித்தம், அரத்தப் புடையன், அரத்தப் பெருக்கு, அரத்தப் போளம், அரத்த மடக்கி, அரத்த மண்டலம், அரத்த மண்டலி, அரத்த மாடன், அரத்த மானியம், அரத்த முடி, அரத்த மூத்திரம், அரத்த மூலம், அரத்த வடி, அரத்த வலிப்பு, அரத்த வழலை, அரத்த வள்ளி, அரத்த விந்து, அரத்த விரியன், அரத்த வுறவு, அரத்த வெட்டை, அரத்த வெறி, அரத்த வேர்வை, அரத்த வோட்டம் என்பன.
அர்- அரளி = செம்பருத்தி.
நெருப்புச் சிவந்த பொருள்களுள் ஒன்று. அதனால் நெருப்பு நிறம் என்பது செந்நிறத்தைக் குறிக்கும். செந்நிறமான சிவனை அழல் வண்ணன் என்றும், தீவண்ணன் என்றும், தேவாரம் குறித்தல் காண்க.
“அழல் வண்ணன்.....
(தேவா. 1055:5)
"தீவண்ணர் திறமொருகாற் பேசா ராகில் (தேவா. 1230 : 6)
சிவந்த பொருட் பெயர்களே பண்பியாகு பெயராகச் செந்நிறத்தை உணர்த்துவதுமுண்டு.
டு : பவழவாய் = சிவந்த உதடு.
குருதிக் காந்தள் = செங்காந்தள்.
இம் முறையிலேயே அரக்கு, அரத்தம் என்னும் பெயர்களும் செந்நிறத்தை யுணர்த்தும்.
எல் என்னும் சொற்போன்றே, அதற்கு மூலமான உல் என்னும் வேர்ச்சொல்லும் நெருப்பை யுணர்த்து மென்பது முந்தினகட்டுரையிற் கூறப்பட்டது.
அலத்தம், அரத்தம் என்னும் சொற்கட்கு மூலமான அல், அர் என்பனவும்; இலந்தை, இலத்தி என்னும் சொற்கட்கு மூலமான இல், இர் என்பனவும்; எல்லி, எரி, என்னும் சொற்கட்கு மூலமான எல், எர் என்பனவும்; ஒன்றோடொன்று தொடர்புடையனவாய், உல் என்னும் அடி