உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 17.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




'உல்' என்னும் வேர்ச்சொல்

61

உல் - உலு - உலுக்கு. உலுக்குதல் = 1. அசைத்தல். 2. அசைத்து உதிர்த்தல். தெ., க. உலுக்கு.

அசைத்தல் என்பது, ஒன்றை வலமும் இடமும் அல்லது முன்னும் பின்னும் பன்முறை விரைந்து சாய்த்தல். சாய்தல் வளைதல் வகைகளுள் ஒன்று.

உலு - உலுத்து. உலுத்துதல் = அசைத்துதிர்த்தல்.

உலு - உலுப்பு. உலுப்புதல் = அசைத்துதிர்த்தல்.

உல்

உள்

உழல். உழலுதல்

=

1. சுழலுதல் (பிங்.).

2. காற்றியங்குதல். 'சிறுகாற் றுழலும்” (கல்லா. கண.). 3. அலைதல். 'ஆட்பார்த் துழலும் அருளில்கூற் றுண்மையால்" (நாலடி. 20). 4. நிலைகெடுதல். 5. துன்புறுதல்.

உழல் - உழலை = 1. சுழன்று வரும் செக்குலக்கை. 2. உருண்டு நீண்ட குறுக்குமரம். “உழலை மரத்தைப்போற் றொட்டன” (கலித். 106). 3. கணைய மரம். "வேழம்... உழலையும் பாய்ந்திறுத்து’ (பு.வெ.12:8).

உழலைத்தடி (உழலைமரம்) = மாட்டின் கழுத்திற் கட்டும் கழுந்து.

உழல்-உழற்சி = 1. சுழற்சி. 2. அலைகை. 3. வருத்தம்.

உழல் - உழற்று உழற்றுதல் = 1. சுழற்றுதல். 2. அலையச் செய்தல். ‘என்னை யவமே யுழற்றி” (திருக்கோ. 100, உரை).

உழல் - உழறு. உழறுதல் = அலைதல். "உழறலர் ஞானச் சுடர் விளக்காய்” (திவ். இயற். திருவிருத். 58). உழல் - உழன்றி = மாட்டின் கழுத்திற் கட்டும் கழுந்து.

=

உழிதல் = 1. அலைதல். உழிதலை யொழிந்துள ருமையுந்

தாமுமே " (தேவா. 553: 10). 2. வளைதல்.

6:

உழி - உழிஞை = பகையரண் முற்றும் (சூழும்) மறவர் சூடும் கொற்றான் மாலை. "உழிஞை முடிபுனைந்து” (பு.வெ. 6 : 1). 2. உழிஞைத்திணை (தொல். பொருள் 64).

ம. உழிஞ்ஞ.

உழிதருதல் = 1. திரிதல். உன்மத்தம் மேற்கொண் டுழிதருமே” 'திருவாச. 5 : 7). 2. இடமாறி யலைதல். “மண்மேல்..... உழிதரக் கண்டோம்” (திவ். திருவாய். 5:2:1).