62
―
உல் உர்
―
வேர்ச்சொற் கட்டுரைகள்
உருள். உருளுதல் = 1. புரளுதல். "திண்வரை யுருள்கிலேன்'” (திருவாச. 5:39). 2. உருண்டு திரளுதல். 3. புரண்டழிதல். 'உலகெலா முருளு மின்றென்” (சீவக. 2452).
ம., க. உருள்., தெ. உரலு.
உருள் = 1. தேர்ச்சக்கரம். “உருள்பூந் தண்டார்” (திருமுருகு. 11). 2. வண்டி (திவா.). 3. சகடமீன் (சூடா.).
ம., க.உருள்.
உருள் - உருளி = 1. வட்டம். 'உருளி மாமதி” (சீவக. 532). 2. சக்கரம். “வல்வா யுருளி கதுமென மண்ட” (பதிற். 27 : 11). க. உருளி. உருள் - உருளை = 1. சக்கரம். “சகடிரு சக்கர வுருளைக ளுய்க்கவே” (பாரத வேத்திர. 50). 2. உருண்ட கிழங்குவகை. 3. கமலை யேற்றத்தில் வாற்கயிறு படும் உருளை.
திரட்சி.
ம். உருள்.
உருளை- உருடை - ரோதை - L. rota, wheel.
ஒ.நோ.புருள் - புருளை- புருடை- பிருடை.
உருடை = வண்டி. “உருடையூடு திரியும்” (சேதுபு. முத்தீர். 42). ருள்- உருண்டை = 1. உருண்டையான பொருள். 2. கவளம். 3.
-
உருண்டை- உண்டை. தெ. உண்ட. “அண்டப் பகுதியினுண்டைப் பிறக்கம்” (திருவாச. திருவண்.)
உருள்- உருட்டு = 1. உருட்டுகை. 2. சக்கரம். “உருட்டோட வோடிய தேர்" (குலோத். கோ. 212). 3. திரட்சி. 4. வெருட்டு. 5. புரளும் குரலிசை. 6. மலைச்சரிவு. 7. ஏமாற்றுகை. உருட்டுப் புரட்டு. பொய்யும் புரட்டும் உருட்டும் திருட்டும்.
உலம் - அலம் = 1. கவைக்கால் அல்லது கொடுக்குள்ள (தேள் திவா.). 2. நளியோரை (விருச்சிகராசி).
அலவன் = கவைக்கால் நண்டு. "ஆடு மலவனை யன்ன மருள் செய” (சீவக. 516)
அலம் = சுழற்சி, துன்பம். “அலமகல் முத்தி யுண்டாம்
(சூத. எக்கிய. பூ. 2:8). அலக்கண் = துன்பம் (பிங்.).
அலம் - அலவு. அலவுதல் = வருந்துதல். “அன்பனைக் காணா தலவுமென் னெஞ்சன்றே” (சிலப். 18: 17).