உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 17.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




'உல்' என்னும் வேர்ச்சொல்

63

அலவு - அலகு = 1. வளைந்த குறடு. 2. உயிரிகளின் கொடிறு. ‘அரணை அலகு திறக்காது.” (பழமொழி). 3. தாடை. 4. வளைந்த நெற்கதிர். “அலகுடை நீழ லவர்” (குறள். 1034).

அலகு-அலக்கு = துறட்டுக்கோல்.

.

உல் - அல் - அல்லல் = துன்பம். “அழிவின்கண் அல்லலுழப்பதாம் நட்பு” (குறள். 787).

ம. அல்லல், க. அல்ல, தெ. அல்லரி.

அல் - அல்லா. அல்லாத்தல் = துன்பமுறுதல்.

"வயவுநோய் நலிதலி னல்லாந்தார்”

அல்லாடுதல் = 1. அலைதல். 2. தொந்தரவு படுதல்.

தெ., க. அல்லாடு.

(கலித்.29)

அல் - அல்லை = துன்பம். அல்லைதொல்லை = மிக்க துன்பம்.

அலத்தல்

=

1. துன்பமுறுதல். "அலந்தாரை யல்லனோய் செய்தற்றால்” (குறள். 1303). 2. வறுமைப்படுதல். அலந்தவர்க் குதவுதல்” (கலித்.133).

அலந்தோன் = துன்பமடைந்தவன் (திருமுருகு. 271). கறிக்கு அலந்தவன் என்பது உலக வழக்கு.

அலந்தை = துன்பம். அலந்தை - அரந்தை = துன்பம். அலந்தலை = 1. துன்பம் (திவா.). 2. கலக்கம். "இவள் பேச்சும் அலந்தலையாய்” (திவ். பெரியாழ். 3: 7: 1).

அலங்குதல் = 1. அசைதல். "அலங்குளைப் புரவி” (புறநா.2). 2.

=

மனந் தத்தளித்தல். 3. இரங்குதல் (பிங்.).

ம. அலங்ங.து. அலங்கு. தெ.,க.அல்கு.

அலங்கல் = அசையும் பூமாலை. அலக்குதல் = அசைவித்தல். “சங்கலக்குந் தடங்கடல்வாய்” (தேவா. 739 : 3).

507 : 3)

அலக்கழிதல்

=

வருந்துதல். "நானலக் கழிந்தேன்" (தேவா.

அலக்கழித்தல் = 1. அலைத்து வருத்துதல். (பணவிடு. கண்ணி. 177). 2. கெடுத்தல். ' “தக்கன் பெருவேள்வியங் கலக்கழித்து” (தேவா. 236 : 1).