11
சுல்' (வளைதற் கருத்துவேர்)
வளைதல் என்பது, சாய்வு, வளைவு, கோணல், வட்டம், உருண்டை, முட்டை, உருளை முதலிய பல கருத்தைத் தழுவும்.
சுல்
—
சுலவு. சுலவுதல் = 1. சுற்றுதல். “அரவூறு சுலாய்மலை தேய்க்கும் ” (திவ். திருவாய். 7:4:2). 2. சுழலுதல். "சுலவுற் றெதிர்போகிய தூவியனம்” (நைடத. அன்னத். 45).
சுலவு- சுலாவு. சுலாவுதல் = சூழ்தல்.
“விரைகமழ் சோலை சுலாவி யெங்கும்" (தேவா. 418 : 1).
சுலாவு = (வளைந்து வீசும்) காற்று. “சுலாவாகி (தேவா. 1227 : 3). சுல் - சில் = 1. வடமானதுண்டு. 2. கடற்சில் (வட்டமான கடற்செடி விதை). 3. உருளை, தேர்க்கால்.
6
சில்- சிலை = 1. வளைந்த வில். "கொடுஞ்சிலைக்கைக் கூற்றினை” (பு. வெ. 1:10). 2. வானவில். “சிலைத்தா ரகலம்” (புறம். 61 : 14). 3. சிலையோரை (தனுராசி) (விதான யாத். 13). 4. சிலை (மார்கழி) மாதம். “சிலையில்வெங் கதிரைத் திங்க ளொன்றிய” (பாரத. முகூர்த். 4).
6
சில் - சிலந்தி = 1. வட்டமான நூல்வலை யமைக்கும் பூச்சி. 2. சிலந்திப் பூச்சிபோன்ற கொப்புளக்கட்டி. ம. சிலன்னி, சிலந்தி - சிலம்பி. "சிலம்பி வானூல் வலந்த மருங்கில்” (பெரும்பாண். 236).
சுல்– சுன்- சுன்னம் = சுழி. சுன்னம் - பிரா. சுன்ன, வ. சூன்ய. சுன் சூன் = வளைவு. 'சூன் நிலம்' (உ. வ.).
சுன்- சின்- சினை = 1. முட்டை (பிங்.) “சினைவளர் வாளையின்” (பரிபா. 7:38). 2. மக்கள் விலங்கு பயிர் முதலிய உயிரிகளின் கரு.