4
சுல்' (வளைதற் கருத்துவேர்)
தெ. ஜென.
103
சுல் சூல் = 1. முட்டை. “ஞமலி தந்த மனவுச் சூலுடும்பின்” (பெரும்பாண். 132). 2. கரு. இளம்பிடி யொருசூல் பத்தீ னும்மோ” (புறம். 130:2). 3. முகில் நீர் நிரம்பியிருக்கை. “சூன்முதிர்முகில்" (பரிபா. 20:3).
சூல் - சூலி = கருவுற்றவள். “சூலி முதுகிற் சுடச்சுட” (திருக்கை வழக்கம். கண்ணி, 12).
ம.சூல், க.சூல், தெ. த்சூலு.
சுல்- சுள்- சுளகு = வளைத்துப் பின்னும் புடைப்புத் தட்டு.
சுள் - சுளி. சுளிதல் = திரிதல். சுளித்தல் = வெறுப்பால் முகத்தைத் திரித்தல்.
சுள்- சுளு- சுளுக்கு = நரம்புப் புரட்சி.
ம., க. சுளுக்கு, து. உளுக்கு, தெ. இலுக்கு.
சுளுக்குதல் = நரம்பு பிசகுதல்.
சுளி- சளி. சளிதல் = ஒரு பக்கம் சரிதல், சுற்றிவரச் சரிந்து சப்பளிதல். ம.சளி(க்க).
சளி - சழி. சழிதல் = உடற்சதை சரிந்து தளர்தல்.
சழிவு நெளிவு = கோணல் மாணல்.
―
சுழங்கு. சுழங்குறுதல் = சுழலுதல். “நெஞ்சகஞ்
சுள் - சுழகு சுழங்குற” (காஞ்சிப்பு. பன்னிரு.276).
=
சுழலுதல் 1. வட்டமாகச் சுற்றிவருதல். 'சுழன்றிலங்கு வெங்கதிரோன்” (திவ். பெரியதி. 9:4:6). 2. உருண்டோடுதல், உருளுதல். "தேர்க்கா லாழியிற் சுழன்றவை” (பெருங். வத்தவ. 12 : 205). 3. பம்பரம்போற் சுற்றியாடுதல். 4. பித்தன்போல் உடம்பைச் சுற்றியாட்டுதல். “சுழலலுஞ் சுழலும்” (மணிமே. 3 : 111). 5. சுற்றித் திரிதல். “குழலின்படி சுழலும்” (கம்பரா. கங்கைப். 3). 6. காற்றிற் கப்பல்போல் அலைவுபடுதல். 7. மனம் அலசடிப்படுதல். “சுழலுஞ் சுராசுரர்க ளஞ்ச” (திவ். இயற். 1: 48) 8. பொறி மயங்குதல். "கண்ணுஞ் சுழன்று பீளையோடு ” (திவ். பெரியதி. 7:4: 1). ம. சுழலு (க). தெ. சுடியு. சுழலமாடுதல் = 1. விடாமுயற்சி செய்தல். 2. ஒருவரை அடிக்கடி கண்டு தொழுதல்.
சுழலி = மாந்த வலிப்புவகை.