உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 18.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுல்* (வளைதற் கருத்துவேர்)

=

105

சூள் - சூழ். சூழ்தல் = 1. சுற்றியிருத்தல். “அறைகடல்சூழ் வையம்” (நாலடி. 230). 2. சுற்றி வருதல். சூழ்கதிர்வான் விளக்கும்” (பு.வெ.9: 16). 3. ஆராய்தல்."நின்னொடு சூழ்வல் தோழி" (கலித். 54). 4. கருதுதல். "புலைசூழ் (மணிமே. 13 28).

வேள்வியில்

6

5. கெடுதலை யெண்ணுதல். "கொடியவன் கடிய சூழ்ந்தான்” (சீவக. 261). 6. தெரிந்தெடுத்தல். "சூழ்புரவித் தேர்”. 7. பண்ணுதல். “பாவை சூழ்ந்தும்” (பட்டினப். 102). 8. வரைதல். “தொய்யில் சூழிளமுலை" (கலித்.125).

சூழ் = 1. சுற்று. "சூழா மெட்டே யாயிர வேதி” (கந்தபு. அசுரர்யா. 61). 2. ஆராய்ச்சி. “கற்றார்சூழ் சொல்லுமாங் கண்டு" (சி. போ.8: 1: 1). 3. தலையணிமாலை. “மென்பூச் சூழு மெழுதி" (திருக்கோ. 79).

=

சூழ்- சூழ்ச்சி = 1. தேர்ந்தெண்ணல். “போற்றார்ப் பொறுத்தலுஞ் சூழ்ச்சிய தகலமும்” (புறம். 2: 7). 2. நுண்ணறிவு. “கருமக் கிடக்கையுங் கலங்காச் சூழ்ச்சியும்” (பெருங். உஞ்சைக். 46 : 117). 3. ஆம்புடை (உபாயம்). "சொல்லாயா னுன்னைச் சார்வதோர் சூழ்ச்சியே” (திவ். திருவாய். 3 : 2 : 3). சூழ்ச்சி - சூழ்ச்சியம் = மதித்திறமை (ingeniousness).

-

சூழ் - சூழல் = 1. சூழ்ச்சி. 2. கூட்டம். “வானவர் சூழலோடு” (கந்தபு.மேருப். 48). 3. இடம். (பிங்.)

சூழி = 1. வட்டமான நீர்நிலை. “அலங்குகதிர்சுமந்த கலங்கற் சூழி” (புறம். 375). 2. கடல்.

சூழியல் = வீட்டிறப்பு. வீட்டிறப்புத் தாங்குங் கம்பு.

சூழியற்படை = வீட்டுச் சுவரின் எடுத்துக்கட்டி.

சுள் - சுட்டி = 1. குழந்தைகளும் மகளிரும் அணிந்துகொள்ளும் வட்டமான நெற்றியணி. “சுட்டி சிதையக் குட்டத்துக் குளித்து ” (பெருங். உஞ்சைக். 40 : 102). 2. மாட்டின் நெற்றியிலுள்ள வெண்சுழி. “சுட்டியை நெற்றியிலேயுடைய கரிய எருது " (கலித். 101:21, உரை). 3. பாம்பு முதலிய உயிரிகளின் உச்சி வெள்ளை. 4. நெற்றிப் பட்டம் (அக. நி.). 5. தலைச்சுழி. 6. குறும்பு. 7. குறும்பன். ம., க., து. சுட்டி.

சுட்டி சுட்டியாக = வட்டம் வட்டமாக. அவன் உடம்பில் சுட்டி சுட்டியாக வெள்ளை விழுகிறது. (உ. வ.).

சுட்டித் தலையன் = 1. தலையிற் சுழியுள்ள குறும்பன். 2. உச்சி வெள்ளையுடைய விலங்கு.

சுட்டித்தனம் = குறும்புத்தனம்.