உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 18.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106

வேர்ச்சொற் கட்டுரைகள்

சுட்டிப்பயல் = குறும்பு செய்யும் பையன்.

சுட்டி

-

சுட்டிகை

=

மகளிர் நெற்றியணி.

சுட்டிகையும்” (பதினோ. ஆதியுலா. 68).

'சூளிகையுஞ்

சுட்டிகை - சுடிகை = 1. நெற்றிச்சுட்டி (திவா.). 2 நெற்றிப் பொட்டு (திவா.). 3. தலையுச்சி (திவா.). 4. மயிர்முடி (திவா.). 5. சூட்டு. "பஃறலைச் சுடிகை மாசுணம்” (கந்தபு. திருநாட்டுப். 19). 6. மகுடம் (திவா.). சுடிகை - வ. ஜுட்டிக்கா.

சூள் - சூடு. சூடுதல் = வளைதல், வளைந்திருத்தல். 'வண்டிச் சக்கரம் சூடியிருக்கிறது. (நாஞ்சில்நாட்டு வழக்கு).

சூடு = வட்டமாக அடைந்த கதிர்ச்சாணை.

சூடு

சூடகம்

=

வளையல். "பாடகத் தரவமுஞ் சூடகத்

தோசையும்” (பெருங். வத்தவ. 12 : 210).

க. சூடக (g), து. சூடக (c) (g), தெ. சூடிகமு (g)

சூடு சூட்டு

=

1. வண்டிச் சக்கரத்தின் விளிம்பைச் சூழத் தைக்கப்பட்ட வளைவுச் சட்டம். "கொழுஞ்சூட் டருந்திய திருந்து நிலை யாரத்து” (பொரும்பாண். 46). 2. பூமாலை. “மல்லிகை நறுஞ்சூட்டு வெள்ளிதின் விளங்க” (பெருங். உஞ்சைக். 46

6

233).

3. நெற்றிப் பட்டம். “செம்பொற் சூட்டொடு கண்ணி” (சீவக. 2569). 4. மகளிர் நுதலணி (பிங்.). 5. பறவைகளின் உச்சிக்கொண்டை. “காட்டுக்கோழிச் சூட்டுத்தலைச் சேவல்” (பெருங். உஞ்சைக். 52 : 62). 6. பாம்பின் படம். “செங்க ணாயிரஞ்சூட் டராவி னறிதுயி லமர்ந்து’ (கூர்மபு. வருணாச். 3). 7. அம்பு விடும் அறை. "இடுசூட்டிஞ்சியின்” (பு.வெ. 6: 18, கொளு).

சுடிகை- சூடிகை = 1. மணிமுடி (பிங்.). 2. கோபுரக் கும்பம். “சூட னீத்தன சூடிகை சூளிகை” (கம்பரா. பள்ளி. 24). சூடிகை- வ. சூடிகா (c, k).

சூள்- சாள்- சாளை = வட்டமான குடிசை (கோவை வழக்கு).

சாளை- சாளையம் = வளைவு.

சாளையக்கை

=

பெருவிரல் சுட்டுவிரல் நடுவிரல் ஆகிய மூன்றையும் நீட்டி, மோதிரவிரல் சுண்டுவிரல்களின் நுனி உள்ளங்கையிற் படும்படி வளைத்து, விரல்கட்குள் இடைவெளி தோன்றச் செய்து மணிக்கட்டை வளைத்துக் காட்டும் நளி நயக்கை (பரத. பாவ. 24).

சாளை

சாணை - = 1. வட்டமான கதிர்ச்சூட்டு (நெ.வ.). 2. சருக்கரை முதலியவற்றால் வட்டமாய்ச் சுட்ட பணியார வகை