உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 18.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4

சுல்' (வளைதற் கருத்துவேர்)

107

(வி. அ.). 3. வட்டமாய்த் தட்டிய புளிமொத்தை. 4. வட்டமான சாணைக் கல். “வாடீட்டிய கிடந்த சாணை” (நைடத. அன்னத்தைத். 14).

சாணை- வ . சாண, சான.

சாணைக்கல்- ம. சாணக்கல்லு, க. சாணெக்கல்லு.

சாள்- சாடு. சாடுதல் = 1. சாய்தல்.

‘பட்டம் வாலுக்குச் சாடுகிறது' (உ. வ.). 2. சாய்ந்து ஒன்றன்மேல் விழுதல். 3. மோதுதல். 4. தாக்குதல். 5. கண்டித்தல். சாடு - சாட்டம் = சாய்வு. 'அங்கணம் வாட்டஞ் சாட்டமாய் (வாட்ட சாட்டமாய்) இருக்க வேண்டும்' (உ.வ.).

சாடு சாடி = ஒருவனைத் தாக்கிச் சொல்லும் கோட்சொல் (பிங்.).

சாடு = - சாடை = 1. சாயல். 'அண்ணனுந் தம்பியும் ஒரே சாடை’ (உ. வ.). 2. சிறிது ஒப்பு 'பார்வையும் பேச்சும் இராமசாமிக் கவுண்டர் சாடையாயிருக்கிறது' (உ. வ.). 3. குறிப்பு. “சாடை பேசிய வகையாலே” (திருப்பு. 572). 'சாடையாய்த் திட்டினான்’ (2. 21.).

4. சைகை. ‘வரும்படி கைச்சாடை காட்டினான்' (உ. வ.). 5. தெரியாதது போலிருத்தல். 'அவன் குற்றத்தை யறிந்தும் சாடையாக விட்டுவிட்டார்’ (2.01.).

'சாடை சாடையாய்ப் பேசுதல்', 'சாடைமாடையா யிருத்தல்' (விட்டு விடுதல்)' என்பன மரபுத் தொடர்மொழிகள்.

சாள் - சாய். சாய்தல் = 1. வளைதல். “சாய்செவிக் குருளை" (சிறுபாண். 130). 2. கவிழ்தல் “நாணடச் சாய்ந்த நலங்கிள ரெருத்தின்” (பொருந. 31). 3. கதிரவன் வானிற் சாய்ந்திறங்குதல். 4. சார்தல். 'தூணின்மேற் சாய்ந்தான்' (உ. வ.). 5. படுத்தல். திருக்கையிலே சாயு மித்தனை” (ஈடு, 2:7:5).

137).

6. நடுநிலை திறம்புதல், ஒருபக்கம் சேர்தல்.

7. தோற்றோடுதல். "வந்தவர்சாய்ந்த வாறும்” (பாரத. நிரைமீட்சி.

8.நடந்தேறுதல். அந்தக் கருமம் (காரியம்) சாய்ந்தது' (உ. வ.).

9. திரண்டு செல்லுதல், அல்லது வருதல். 'திருவிழாவிற்கு மக்கள் திரள் சாய்கிறது' (உ. வ.).

10. தளர்தல் "கள்ளொற்றிக் கண்சாய் பவர்” (குறள். 927). 11. வருந்துதல். 'சாய்குவ ளல்லளோ” (கலித். 79 : 10). 12. மெலிதல்.