உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 18.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108

வேர்ச்சொற் கட்டுரைகள்

'சாயினள் வருந்தியா ளிடும்பை” (கலித். 121). 13. வற்றுதல். "கான்யாற்றுக் கடும்புனல் சாஅய்” (அகம். 25).

14. விழுதல். 15. இறத்தல். 16. அழிதல். “மறஞ்சாய” (பு. வெ. 2:1,

கொளு).

ம.சாய், வ. சய் (c), சீ.க்ஷய்.

சாய்கடை- சாக்கடை = வாட்டமாகவுள்ள அங்கணம் (சலதாரை). உ. சாக்கித்.

ஒ.நோ: சூல் - சால் - சாலகம் = அங்கணம். சாலுதல் = சாய்தல்.

6

சாய் = 1. சாயல், அழகு. “சங்கஞ் சரிந்தன சாயிழந்தேன்” (திவ். திருவாய். 8: 2: 1). 2. சாயம், நிறம். 'சாயாற் கரியானை” (திவ். இயற். பெரிய திருவந். 14). 3. சாயை, நிழல். 4. ஒளி. “சாய்கொண்ட விம்மையும்” (திவ். திருவாய். 3 : 9 : 9). 5. புகழ். “இந்திரன்தன் சாயாப் பெருஞ்சாய் கெட” (கம்பரா. நாகபா. 21).

காலம்.

சாய்கால் அல்லது சாய்காலம் = சொற் செல்லும் (செல்வாக் குள்ள)

=

சாயுங்காலம் (சாயுந்தரம்) = கதிரவன் சாயும் எற்பாடு. 'பொழுது சாய்தல்' என்னும் வழக்கை நோக்குக. சாயுங்காலம் - சாயங்காலம் - சாய்ங்காலம். வடமொழியாளர் சாயங்காலம் என்னும் வழுநிலைச் சொல்லை மாரிக்காலம் என்பது போன்ற காலப் பெயராக மயங்கி, சாயம் என்னும் நிலைமொழி வடிவை எற்பாட்டைக் குறிக்கும் வடசொல்லாக அமைத்துக் கொண்டனர்.

‘சாயம்'- வ. ஸாயம்.

=

சாய்தல் = படுத்தல். தலை சாய்த்தல் = படுத்தல், சிறிது நேரம் உறங்குதல். தலைசாய்க்க நேரமில்லை' (உ.வ.) சாயல் = படுக்கை, துயிலிடம் (பிங்.).

சாய் - (சாயனம்) - வ. சயனம் = படுக்கை.

சாய்கை = படுக்குமிடம், இளைப்பாறுமிடம், தங்குமிடம்.

ஒ.நோ: இ.ஐகா, உ.ஜாகா.

சாய்- சாயை - 1. நிழல். தன்னது சாயை தனக்குத வாது" (திருமந். 170). 'நிழல் சாய்கிறது' (உ. வ.). 2. படி வடிவம் (பிரதிபிம்பம்). 3. நிழற்கோள் (இராகு கேதுக்கள்). 4. ஒப்பு. 'இக் குழந்தைக்குத் தகப்பன் சாயை உள்ளது' (உ. வ.). 5. புகழ். "நின்சாயை யழிவுகண்டாய்” (திவ். பெரியாழ். 5 : 3 : 3). 6. நிலப்பகுதி, கொந்து. 'ஒரு சாயையிலே மேகம் வர்ஷியா நின்றால்” (ஈடு, 4:5:2).