உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 18.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கல் (கருமைக் கருத்துவேர்)

அங்காளம்மை

தெ. அங்காளம்ம.

5

காளம் - காளகம் = கருமை. “காளக வுடையினள்” (சீவக. 320). காளகம்- வ.காலக்க.

காளி - காளிமை = கறுப்பு. "காளிமைப் பிழம்பு போத” (கம்பரா. உயுத். நாகபா. 217).

காளிமை - வ.காலிமா.

காளிமை- காளிமம் = கறுப்பு. "தனது காளிமங் கழிப்ப." (கந்தபு. ருநகரப். 72). காளிமம் = வ. காலிமன்.

காளி- காளிகம் = கரிய மணித்தக்காளி (மலை.).

=

காளிகம்- காளிக்கம் = கருஞ்சாயம் (யாழ். அக.). காளிக்கம் - வ.

காலிக்க.

காள்- காழ் = 1. கருமை. “கதுப்பு விரித்தன்ன காழக நுணங்கறல்.” (சிறுபாண். 6). 2. கரிய மரமாகிய இரும்பிலி (மலை.). 3. குற்றம். “எக்காழு மிகந்துல இன்பமுற” (காஞ்சிப்பு. கழுவாய். 300).

பூடு.

=

காழ் - காழகம் = கருமை. “காழக மூட்டப்பட்ட” (சீவக. 1230). கள்- (கர்)- கர- கரந்தை = நீல நிறமுள்ள பூவகை, அதையுடைய

(கர்) - கரம் - கரம்பு = கரிசல் நிலம்.

கரம்பு கரம்பை

=

1. கரிய பழமுள்ள சிறுகளா (மலை.). 2. வறண்ட களிமண். 3. கரிசல் நிலம். "இருநிலக் கரம்பைப் படுநீ றாடி (பெரும்பாண். 93). 4. பயிரிடாத கரிசல் நிலம். “விடுநிலக் கரம்பை விடரளை நிறைய.” (பதிற். 28). 5. வண்டற் களிமண்ணிலம்.

கர் - கரி = 1. கரிந்தது. 2. அடுப்புக்கரி. 3. யானை. 4. கண்ணிலிடு மை. "கரிபோக் கினாரே” (சீவக. 626). 5. மரவைரம்.

20.).

கரி - கரியன் = கரிய திருமால்.

கரி - தெ., த., ம., து. கரி.

கரி - கரிது - கரிசு = 1. கருமையானது. 2. குற்றம்.

“வினைகரி சறுமே " (தேவா. 129 : 1). 3. தீவினை (பாவம்). “கரிசினை மாற்றி” (சைவச. பொது. 568).

கரிதல் = 1. கருமையாதல். "கரிந்த நீள்கயல்” (திருவிளை. விருத்தகு.

2.

கரியாதல். "கரிகுதிர் மரத்த கான வாழ்க்கை” (அகம். 75). 3. தீய்தல். "காயெரிக் கரியக் கரிய” (கம்பரா. மிதிலை. 81).