உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 18.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6

கரி - கரிச்சான் = கரிக்குருவி.

கர்

வேர்ச்சொற் கட்டுரைகள்

கரு. கருத்தல் = கறுப்பாதல். கருமா = 1. யானை (பிங்.). 2. பன்றி. “கருமாலுங் கருமாவாய்” (பெரியபு. திருஞான. 1003).

கரு கருகு. கருகுதல் = 1. நிறங்கறுத்தல். 2. இருளுதல், “கருகு கங்குலிற் போதரும்” (உபதேசகா. கைலை. 46). 3. பயிர் தீதல்.

கருகு

(decoction)

கருக்கு = மருந்துச் சரக்கைக் கருக்கிக் காய்ச்சிய சாறு

கருகு - கருகல் = 1. தீந்து போகை. 2. கருகின பொருள். 3. இருள் என்னும் பச்சைக் கற்குற்றம் (சிலப். 14 : 184, உரை), 4. மங்கலொளி. 5. பொருட்டெளிவின்மை.

கருக்கு- கருக்கம் = கார்முகில்.

"கருக்க மெல்லாங் கமழும் பொழில்" (தேவா. 884: 8).

கருக்கு- கருக்கல் = 1. காரிருள். 2. மங்கிருட்டு, விடியற் கருக்கல். 3. வானத்தில் முகில் படிதல். வானம் கருக்கலிட் டிருக்கின்றது என்பது உலக வழக்கு. கருக்கல் - ம. கருக்கல்.

கரு - கருப்பு = கருமை, இருள், இருண்டு தோன்றும் பேய், இருட்காலம் போன்ற பஞ்சம்.

கருப்பு- தெ. கருவு.

கருப்பு - கருப்பை = 1. காரெலி, எலி. “அணிலொடு கருப்பை யாடாது” (பெரும்பாண். 85). 2. கருங்காய்ப் பனை (யா.)

கரு

கரும்பு = முதிர்ச்சியால் இருண்ட செங்கரும்பு, நாணற் கரும்பு, வேழக்கரும்பு, வரிக்கரும்பு (இராமக் கரும்பு) என்னும் வழக்குகளில், கரும்பு என்பது பொதுப்பெயர்.

கரும்பு-து. கரும்பு, ம. கரிம்பு, க. kabbu.

கரு

கருள் = 1. கறுப்பு. 'கருடரு கண்டத்து..... கைலையார்” (தேவா. 337:4). 2. இருள் (பிங்.), 3. குற்றம். “கருடீர் வலியால்” (சேதுபு. முத்தீர்த். 5). கருள்- க்ருஷ் (வ.).

கர்- கறு. கறுத்தல் = கருநிறமாதல். கறுகறுத்தல் = 1. மிகக் கருத்தல், 2. மிகச் சினத்தல்.

கறுகுறு- ம. கறுகறு.

கறு - கறுப்பு = 1. கருமை (பிங்.). 2. கறுப்புப் புள்ளி. 3. கறை. 4. தழும்பு. “கைத்தலத் துணை கறுப்புற” (உபதேச. சிவபுண்ய. 315).5. குற்றம். 'உள்ளக் கறுப்பினை யறுத்து” (சிவதரு. சிவதரும். 25).