உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 18.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கல் (கருமைக் கருத்துவேர்)

7

6. பேய். "கறுப்பென்னி லோபோய்ப் பணிகுவார்” (அறப். சத. 30). 7. இராகு (சூடா.), 8. கருவைரம். 9. வெகுளி.

"கறுப்புஞ் சிவப்பும் வெகுளிப் பொருள”(தொல். சொல். 372)

சினக்கும் போது, கருநிற மக்கள் முகம் மிகக் கருத்தலும் செந்நிற அல்லது பொன்னிற மக்கள் முகம் மிகச் சிவத்தலும்பற்றி, கறுப்பும் சிவப்பும் வெகுளிப் பொருள் பெற்றன. முகத்தினுங் கண் சிவத்தல் விளங்கித் தோன்றுவதாம்.

கறுப்பு- ம. கறுப்பு.

கறுப்பு - கறுப்பன் = 1. கரியவன், 2. மும்மாதத்தில் விளையும் கார்நெல்வகை. கறுப்பன்- ம. கறுப்பன்.

கறுப்பி

= 1. கரியவள், 2. கறுப்பாய் என்னும் காளி. 3. கருவண்டு. கறுப்பி- ம. கறும்பி.

கறுத்தை = 1. கரியவள். 2. கருங்காளை.

கருவல் = 1. கருமை. 2. கரிய - வன்– வள்- து. 3. சினப்பு.

கறுவு = 1. சினம் (திவா.). 2. வயிர்த்த பகை.

கறுவு- கறுமு. கறுமுதல் = சினத்தல்.

-

கறு - கறை = 1. கருநிறம். “கறைமிடறு” (புறம். 1: 5). 2. இருள். கறைபடு பொழில்" (தேவா. 624:8).3. மாசு. 'பற்கறைகள் மாற்றல்" (காசிக. இல்லொழுக். 27). 4. குற்றம். “பிறக்கப் பிறக்கக் கறையேறுகை” (திவ். திருப்பா. 21, வியா.). 5. கருங்காலி வகை.

கறை - ம. கற, தெ. கர, க. கறே.

.

கறு - கறள் = கறை. க. கறள்.

கரு கார் = 1. கருமை. 2. கரியது. 'களங்கனியைக் காரெனச் செய்தாரு மில். ” (நாலடி. 103). 3. முகில். “கார்கலந்த மேனியான்” (திவ். இயற். பெரிய திருவந். 86). 4. மழை. “கார்பெற்ற புலமேபோல்" (கலித். 38). 5. நீர் (பிங்.). 6. கார்ப்பருவம். “காரு மாலையும் முல்லை” தொல். பொருள் 6). 7. கார் நெல், காரரிசி. (பதார்த்த. 799). 8. கருங்குரங்கு (பிங்.). 9. வெள்ளாடு என்னுங் காராடு (பிங்.). 10. மயிர் (பிங்.). 11. கருங்குட்டம். “காரக்குறைந்து” (கலித். 65). 12. இருள். "காரடு காலை” (பரிபா. 12:85) 13. அறிவு மயக்கம். “களவென்னுங் காரறி வாண்மை” (குறள். 287). 14. பசுமை. “காரார் குருந்தோடு" (திணைமாலை. 12). 15. அழகு (பிங்.). 16. கார்க்குவளை காலுங் கனல். (பு.வெ. 12. பெண்பாற். 11). 17. ஆறாச்சினம் (LBI.).