உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 18.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8

கார்- ம.,து, க. கார், தெ. காரு.

வேர்ச்சொற் கட்டுரைகள்

கார்- காரி = 1. கருமை (பிங்.). 2. கருநிறமுடையது (திவா.). 3. காக்கை (திவா.). 4. கரிக்குருவி. “கட்சியுட் காரி கலுழ்ம்.' (பு. வெ. 1: 3). 5. கரிய எருது. 'சுரிநெற்றிக் காரி" (கலித். 101 : 21). 6. காரீயம் (சங். அக.). 7. வாசுதேவன், 'செங்கட் காரி" (பரிபா. 3 : 81). 8. வேந்தன் (தேவர்கோன்). 9. கருங்கோள் (சனி). “காரி வாரத்தில்” 'குற்றா. தல. மூர்த்தி. 30).

கங்கு.

கள்- (கண்)- (கண்கு) - கங்கு = கருந்தினை (பிங்.). கங்கு- வ.

கங்கு- கங்குல் = கரிய இரவு.

“கங்குலும் பகலுங் கண்டுயி லறியாள்"(திவ். திருவாய். 7: 12: 1).

கள்- (கய்)- கயம் = கரிக்குருவி.

“கோக்கயம்” (திருவாலவா. 60 : 13)

கயம் - கயவு = கருக்குருவி (பிங்.).

கயம்- கசம். காரிருளை இருட்டுக்கசம் என்பது நெல்லை வழக்கு.

காள் - காய் = காயம் = 1. கரிய வானம்.

6

“விண்ணென வரூஉங் காயப்பெயர்”(தொல். எழுத்து. 305)

காயம்-காசம் = வானம்.

“காச மாயின வெல்லாங் கரந்து" (கம்பரா. மருத்து. 40)

காசம் - ஆகாச (வ.)

2.கரிய மலர்வகை.

"காய மலர் நிறவா”

(திவ். பெரியாழ். 1: 5 : 6)

காய் - காயா. காயாம்பூ = காயமலர். “காயாம்பூ வண்ணனிவை கழறு மன்றே” (கூர்மபு. இராமனவதா. 1). காயா - காசா = 1. காயாம்பூ. 'காசாகடன்மழை யனையானை” (கம்பரா. கங்கை. 53). 2. எருமை (பிங்.).

காய் - காயல் = 1. கரிய உப்பங்கழி (சூடா.). கழிமுகம் (பிங்.), 2. பொருநை (தாம்பிரபரணி) முகத்திலுள்ள ஓர் ஊர். "தென்காயற் பதியானே” (தனிப் பாடல்).

காயல் - ம.காயல்.