உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 18.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கல் (கருமைக் கருத்துவேர்)

1. கன்னலமுது

கிளைக் கருத்துகள்

9

கன்னல் = கரும்பு (திவா.), சருக்கரை (திவா.), கற்கண்டு (திவா.), மணற்பாகு (பிங்.), கன்னலமுது (பாயசம்). மூவகைக் கரும்புள் கரிய செங்கரும்பே இனிமை மிக்கும் பெருவழக்காகவும இருத்தல் காண்க.

2. வயிரம் (வைரம்) அல்லது முதிர்ச்சி

=

ஒருசார் மரவயிரம் கருநிறத்தது. "வெள்ளை சூவை (வெளிறு), கறுப்பு வயிரம்” என்பது ஒரு மரபுச் சொலவு. கரி = மரவைரம். கருங்கரி = முதிர்ந்த இறைச்சி. கருங்காய் = முற்றிய காய்.

6

காழ்த்தல் = 1. வயிர்த்தல், முற்றுதல். “காழ்ந்த மரம் (திரிகடு. 75). 2. மனவைரங் கொள்ளுதல். 'காழ்த்த பகைவர் வணக்கமும்" (திரிகடு. 24). காழ் = 1. மரவைரம் (திவா.). 2. மனவுறுதி. “காழிலா மம்மர்கொள் மாந்தர்" (நாலடி. 14). காழ்ப்பு = 1. வைரம் (LBI.). 2. மனவைரம். "காழ்ப்பு மருட்கை மதத்தோடு” (சேதுபு. மங்கல. 15, காய்த்தல் = 1. முற்றுதல், முதிரவிளைதல். “காய்நெல்லறுத்து” (புறம். 184). 2. தழும்புண்டாதல். காய்ப்பு 1. தோலின் தடிப்பு. 2. தழும்பு. கறுப்பு = தழும்பு. கறுத்தல் = முற்றுதல். “கௌவை கறுப்ப” (மதுரைக். 271.) கறுவு = வயிர்த்த சினம். “கறுவொடும் பிரக லாதன் கதழ்சினம்” (கூர்மபு. அந்தகா. 86).

கறு = மனவைரம். “அரக்கன்

கும்பக. 357). கறம் = வயிர்த்த பகை.

3.நஞ்சு

=

கறுவுடையான்” (கம்பரா.

பாம்பின் நஞ்சுகலந்த அரத்தம் கருநிற மடைந்துவிடுவதாலும், சில நச்சுப் பொருள்கள் கருநிறமா யிருப்பதாலும், கருமைக் கருத்தில் நச்சுக் கருத்துத் தோன்றிற்று.

66

கரம்

=

களம் = நஞ்சு (பிங்.). களம் - நஞ்சு. “கரம்போலக் கள்ளநோய் ’” (சிறுபஞ். 62). கரம்- Skt. gara. களங்கம் = ஒருவகை இயற்கை நஞ்சு. கறை நஞ்சு. 'கறையுறு பகுவா யுரகம்” (ஞானா. பாயி. 7: 5). காரி = நஞ்சு. "காரியுண்டிக் கடவுள தியற்கையும்” (மலைபடு. 83). காளம் = நஞ்சு (திவா.). கரி = நஞ்சு (மூ. அ.).

=