உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 18.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12

வேர்ச்சொற் கட்டுரைகள்

கரு- கரும் - கருமு கருமம் - கம்மம்-கம்- கம்மாளன். கம்- கம்மியம் - கம்மியன். கருமம்-வ.கர்மன்.

கரு- கருவி. கரு- கரணம் = செயற்கை, கருவி. கரணம்- வ. கரண. கருத்தல் என்னும் வினை வழக்கிறந்தது.

11. இழிவு

கருங்குலம் (கருஞ்சாதி) = கீழ்மக்கள். கருங்கூத்து = இழிந்த வகையான நாடகம். கருநிலம் = பண்படாத நிலம். கருமகள் = சண்டாளி.

12. தீமை

கருங்கண் = கண்ணேறு (evil eye.) கருந்தொழில் = கொலை வினை. கருநாள் = கரிநாள்.

13. சிறப்பு

கருந்தனம் = சிறந்த செல்வம். கருஞ்சரக்கு = கூலம், பலசரக்கு.

14.560L

கருந்தலை = தொடக்கம், முடிவு.

சிறுகிளைக் கருத்துகள்

1. குற்றக் கருத்தின் கிளை

களக்கம்- களக்கர் = 1. கீழோர். 2. ஒரு வேட்டுவக் குலத்தார்.

கீழ்மக்களும் ஆறலைக்கும் வேட்டுவரும் குற்றவாளிகள் என்னும் வகையில் ஒரு வகுப்பாராவர்.

2. மறைவுக் கருத்தின் கிளைகள்

1.களவு

களவென்பது ஒருவன் பொருளை இன்னொருவன் மறைவாகக் கவர்தல். கள்- கள்ளம் = திருட்டு. கள்ளம்- கள்ளன்.

கள் + தல் = கட்டல் (திருடுதல்). 'கட்போருளரெனின் (சிலப். 5: 115). கள்வு- கள்வம் = திருட்டுச் செயல். கள்வன் = திருடன். கள்வு- களவு - களவன். களவு- களவாளி- களவாணி. களவு- களவு (பிங்.).

=