உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 18.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கல் (கருமைக் கருத்துவேர்)

கள்ளம் - ம. கள்ளம், தெ. கல்ல.

13

கள்வன் - ம. கள்வன், து. கள்வே, வ. கலம. களவு- ம., க., து. களவு, Gk. klepto (to steal), L. clam (secretly).

கரத்தல் = கவர்தல். கரவு = களவு (திவா.). கரவர் = கள்வர் (பிங்.). கரவடம் = களவு (திவா.). கரவடர் = திருடர் (திவா.). கரவட நூல் களவுநூல். (சிலப். 16 : 180, அரும்.).

2. வஞ்சனை

=

வஞ்சனை யென்பது ஒன்றை உள்ளத்தில் மறைத்து வைத்தல்.

=

=

கள்ளம் = வஞ்சனை. “கள்ளம் பிறவோபசப்பு” (குறள். 1184). களவு = வஞ்சனை. “நங்களவ றுத்துநின் றாண்டமை” (திருவாச. 5: 35). கரவு = வஞ்சனை. “களவறிந்தார் நெஞ்சிற் கரவு” (குறள். 288). கரவடம் = வஞ்சகம். “மனத்திலே கரவடமாம் வேடம்” (தண்டலை. சத. 29).

3. பொய்

=

பொய்யாவது சொல்லால் ஒன்றை மறைத்தல். கள்ளம் பொய். "கள்ளமே பேசி” (தேவா. 1115 : 6). கரவு = பொய். “கரவெனு முன்ற னூலில்” (திருவாத. பு. புத்த.55).

4. ஈயாமை

ஈயாமையாவது ஒருவன் தன் பொருள் நுகர்ச்சியைப் பிறருக்கு

மறைத்தல்.

கரத்தல் = கொடாதிருத்தல் (பிங்.). கரு- கரும் - கருமு. கருமுதல் = பிசினித்தனம் பண்ணுதல். கருமி = கஞ்சன்.

5. கரைதல்

கரைதலாவது ஒரு பொருள் சிறிது சிறிதாய் மறைதல்.

கர- கரை. கரைதல் = சிறிது சிறிதாய்க் கரத்தல், உருகுதல். கர- ம. கரக்கு, தெ.,க.,து. karagu.

6. நீக்குதல்

நீக்குதலென்பது ஒன்றை ஓரிடத்தில் இல்லாவாறு மறைத்தல்.

கள் + தல் = கட்டல் (களை பறித்தல்). கள்- களை. களைதல் நீக்குதல். கள் - ம., க. கள்.

=