உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 18.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14

7.கள்

வேர்ச்சொற் கட்டுரைகள்

கள் என்பது உணர்ச்சியை அல்லது புலனை மறைப்பது.

ம.க.கள்,

கள் = மது, கள் - ம., க. கள், தெ. கல்லு, து. கலி. களித்தல் கட்குடித்தல், மதுவுண்டல். களி = கட்குடியன்.

கட்கருத்தின் கிளை

=

கள்- களி. களித்தல் = 1. கட்குடித்து மகிழ்தல். 2. கள்ளுண்டு வெறி கொள்ளுதல். “களித்தானைக் காரணங் காட்டுதல்" (குறள். 929). 3. மகிழ்தல்.

களி = 1. கள்ளுண்டு மகிழ்கை. 2. கள்ளுண்டு வெறிகொள்கை. 'சான்றோர் முகத்துக் களி” (குறள். 923). 3. உள்ளச் செருக்கு. 4. மகிழ்ச்சி. 5. மதிமயக்கம் (திவா.). 6. யானை மதம். “கால வேகங் களிமயக் குற்றென” (மணிமே. 4: 44). கள் = 1. கள்ளிற்கினமான தேன். ‘தேனுண்ணும் வண்டு. "கள்ளின மார்த்துண்ணும் வண்கொன்றை யோன்” (திருக்கோ.295).

6

களி - களிறு = 1. மதங்கொண்ட ஆண்யானை. "வேழக் குரித்தே விதந்துகளி றென்றல்” (தொல். 1533). 2. ஆண் பன்றி. “கேழற் கண்ணும் கடிவரை யின்றே’ (தொல். 1534).