உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 18.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2

'குல்' (கூடற் கருத்துவேர்)

அடிக்கருத்து (கூடல்)

=

குல் - குலம் 1. கூட்டம். "பூமனைவாய் வாழ்கின்ற புட் குலங்காள்” (நள. 37), “மாளிகைக் குலந்துகைத்து” (தணிகைப்பு. சீபரி. 373). 2. பெற்றோரும் பிள்ளைகளும் கூடிய குடும்பம். 3. மரபுவழிக் குடும்பம். "குலந்தாங்கு சாதிக ணாலினும்” (திவ். திருவாய். 3 : 7: 9), "மலையுறை கடவுள் குலமுதல் வழுத்தி” (ஐங். 259). 4. உயர்மரபுவழிக் குடும்பம். "குலத்திற் பிறந்தார்வாய்ச் சொல்” (குறள். 959). 5. உறவினர் தொகுதி. "குலத்தைக் கெடுக்குங் கோடரிக் காம்பு”. 6. நாடு மொழி தொழில் மதம்பற்றிய வகுப்பு (community) அல்லது குடும்பம். 7. ஆரியர் வகுத்த பிறவி வகுப்பு (சாதி). “குலம் குப்பையிலே, பணம் பந்தியிலே". 8. பால் (வருணம்). 'குலம் நான்காகப் பகுத்த வகையால் தெரிந்த அந்தணர் அரசர் வணிகர் வேளாளரெனச் சொல்லப்பட்டா ரிருக்கும் நான்காய் வேறுபட்ட தெருக்களும்” (சிலப். 14 : 212, அடியார் உரை). 9. இனம் (species). ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்” (திருமந். 2104). 10. கொங்கு வேளாளர் குலப்பிரிவு. தூரன்குலம். 11. குடும்பம் குடியிருக்கும் வீடு (பிங்.). 12. அரசன் வீடாகிய அரண்மனை (திவா.). 13. இறைவன் வீடு போன்ற கோயில். "தேவ குலமுந் தெற்றியும் பள்ளியும்” (மணிமே. 26 : 72). குலம் - குலன்.

குலம் - வ. குல, Gael. clann, E. clan.

குல் - குலை = 1. காய்த்திரள், வாழைக்குலை. 2. பூங்கொத்து. "நீடுகுலைக் காந்தள்” (பெரும்பாண். 371). 3. ஈரற்குலை, 'வீரர் குலைக ளற்றிட” (அரிச். 4. வேட்டஞ். 48).

குலை - ம. குல, தெ. கொல (gola), க. கொலெ (gole).

குல் - குல-குலவு. குலவுதல் = 1. மகிழ்தல். "மறையோர் குலாவி யேத்துங் குடவாவில்” (தேவா. 763 : 2). 2. கொண்டாடுதல் (பிங்.). 3.