உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 18.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'குல்' (கூடற் கருத்துவேர்)

19

9. மதிப்பு. “கட்டோடு போனாற் கனத்தோடு வரலாம்' 10. நெல்லைக் கட்டிக் கூறுங் குறி. “கட்டினுங் கழங்கினும்” (தொல். பொருள் 115). 11. பொய் யுரை “கருமங் கட்டளை யென்றல் கட்டதோ” (கம்பரா. கிட். அரசி. 16).

கட்டு

கட்டம் = 1. கவறாட்டத்திற்கு வரையும் அறைகள். (பெருங். மகத. 14:56). 2. காடு (திவா.). 3. மோவாய்க் கட்டை (பிங்.). தெ.கட்டமு (gaddamu).

13).

கட்டு

கட்டகம் = காந்தக்கல். “நலமலி கட்டகம்” (ஞானா. 55:

=

வீடு கட்டுதல். பொத்தகங் கட்டுதல்,

கட்டு கட்டடம் பொன்னணியிற் கற்பதித்தல். கட்டடம் - தெ. கட்டடமு.

கட்டு - கட்டணம் = 1. பாடை. 2. செலுத்தும் பணம். கட்டணம் - க. கட்டண.

113). 4.

கட்டு - கட்டளை = 1. செங்கல் முதலியவற்றின் அச்சு. “கட்டளை கோடித் திரியின்” (அறநெறி. 56). 2. உருவங்கள் வார்க்குங் கருவி. 3. ஒன்றுபோல் அமைத்த உருவம். “காட்டி வைத்ததோர் கட்டளை போல” (பெருங். உஞ்சைக். 33 உவமை (பிங்.). 5. உரைகல். “சால்பிற்குக் கட்டளை யாதெனின்” (குறள். 986). 6. ஒழுங்கு. 7. கட்டுப்பாடு. 8. சமய நெறிமுறைகளை யுணர்த்தும் நூல். 9. கோயிலிற் சிறப்பாக ஓர் அறஞ்செய்தற்குச் செய்யப்படும் ஏற்பாடு. 10 அதிகாரியின் உத்தரவு அல்லது ஏவல். தெ. கட்டட, க. கட்டளே.

கட்டு - கட்டாடி = குறிசொல்வோன்.

கட்டு- கட்டாப்பு = 1. வேலியடைத்த நிலம். 2. தடவை.

கட்டு – கட்டாயம் = தப்பாமற் செய்ய வேண்டிய நிலைமை. தெ. கட்டாயமு (kaddayamu), க. கட்டாய (kaddaya).

குள்- (குய்) - குயில். குயிலுதல் = செறிதல் (திவா.).

குல்- (குர்)- குரல் = 1. சேர்க்கை. “குரலமை யொருகாழ்” (கலித். 54 : 7). 2. கொத்து. “கமழ்குரற் றுழாய்” (பதிற். 31 : 8). 3. கதிர். “வரகி னிருங்குரல்” (மதுரைக். 272). 4. பெண்டிர்கூந்தல். "நல்லார் குரனாற்றம்” (கலித். 88). 5. மகளிர் குழல் முடிக்கும் வகைகளுள் ஒன்று. (பு. வெ. 9:35, உரை).

குர்- குரு- (கரு) - கருவி = தொகுதி. “கருவி தொகுதி" (தொல். சொல். உரி. 56). It. gruppo, F. groupe, E. group.

குள் - குழு = 1. கூட்டம் (திவா., பிங்.). 2. தொகுதி.