உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 18.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20

வேர்ச்சொற் கட்டுரைகள்

"இந்தனக் குழுவை” (ஞானா. 63: 11). குழு - குழூஉ.ம. குழு.

குழு குழுவு. குழுவுதல் = கூடுதல். “மள்ளர் குழீஇய விழவி னானும்” (குறுந். 31), "குமரரு மங்கை மாருங் குழுவலால்” (கம்பரா. வரைக. 28). குழு - குழுவல் = கூட்டம்.

குழு- குழும்பு = திரள். களிற்றுக் குழும்பின்” (மதுரைக். 24).

குழும்பு - குடும்பு = 1. காய்கனிக் குலை (பிங்.). 2. பண்டை ஊரவைத் தேர்தலுக்கு வகுத்த ஊர்ப்பகுதி (ward).

குடும்பு - குடும்பம் = பெற்றோரும் பிள்ளைகளும் சேர்ந்த கூட்டம். "குடும்பத்தைக் குற்ற மறைப்பானுடம்பு” (குறள். 1029). குடும்பம்- வ. குட்டும்ப.

குழுவு- குழுமு. குழுமுதல் = கூடுதல். “மாத ரெண்ணிலார் குழுமி” (காஞ்சிப்பு. பன்னிரு. 134). 2. கலத்தல். “கொன்றையுந்துளவமுங் குழுமத் தொடுத்த" (சிலப். 12, து.ப. மடை. க0).

குழுமு- குழுமல் = கூட்டம் (பிங்.).

குழுமு - குழுமம் - குழாம் = 1. கூட்டம். "மயிற்குழாத் தொடும் போகுமனனம்” (கந்தபு. திருநகரப். 31). 2. அவை. “சான்றோர் குழா. அத்துப் பேதை புகல்” (குறள். 840).

குழு - குழம்பு. குழம்புதல் = பலவகைப் பொருள் கூடுதல்.

குழுமு - கழுமு. கழுமுதல் = 1. சேர்தல். “பெண்டிர்..... செந்தீக் கழுமினார்.” (பு.வெ. 7:28). 2. பொருந்துதல். “கழுமிய காதல்” (பு. வெ. 10, முல்லைப். 5, கொளு). 3. திரளுதல். “மென்புகை கமழு சேக்கை” (சீவக. 1350). 4. கலத்தல். "கழுமிய ஞாட்பு” (தொல். சொல். 351, உரை.)

குழு - கெழு. கெழுதகை = நட்புரிமை. “கிள்ளி வளவனொடு கெழுதகை வேண்டி” (மணிமே. 25 : 14).

கெழுதகைமை = நட்புரிமை. "நட்பிற் குறுப்புக் கெழு தகைமை” (குறள். 802).

கெழு - கெரு = நட்பு. “ஒருவன் கெழியின்மை கேட்டா லறிக” (நான்மணி. 63). க. கெளெ.

=

கெழு - கெழுவு. கெழுவுதல் = 1. பொருந்துதல். “மங்கையைக் கெழுவின யோகினர்” (தேவா. 951: 5). 2. நிறைதல். "கெழுவிய காதலை யென்று” (தணிகைப்பு. களவு. 530). 3. பற்றுக்கொள்ளுதல் (சூடா.).