உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 18.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'குல்' (கூடற் கருத்துவேர்)

63).

21

கெழுவு - நட்பு. "கேளிர் மணலின் கெழுவு மிதுவோ” (பரிபா.8:

=

கெழுவு- கெழுமு. கெழுமுதல் = 1. கிட்டுதல். "ஒன்னாதார் படைபுகழுமி" (பு. வெ. 3: 12, கொளு). 2. பொருந்துதல் “தேரோடத் துகள்கெழுமி” (பட்டினப். 47). 3. நிறைதல். “கெழுமி யெங்கணுமாய்க் கிளரொளிச் சடையனை” (வள்ள. சத்தியஞான. பதியியல், 9).

42).

அருக.).

குள்- கூள். கூளுதல் = திரளுதல். கூண்டன கரிகள்” (இரகு. மீட்சி.

கூளம் = பலவகைத் தாளும் வைக்கோலுங் கலந்த மாட்டுணவு. கூளப்படை = பலவகையினர் கலந்த கூட்டுப்படை, (ஈடு. 6: 6:1

கூள் - கூளி = 1. கூட்டம் (பிங்.). 2. குடும்பம் (பிங்.).

கூளியன் = கூட்டாளி, நண்பன் (சூடா.)

கூள்

.

= கூடு. கூடுதல் = ஒன்றுசேர்தல், திரளுதல், பொருந்துதல், நட்புறுதல், மிகுதல்.

ம.,தெ.க.,து. கூடு.

கூட = உடன். ம., தெ., க.,து.கூட.

=

கூடு- கூட்டம் = கூடுகை, திரள், அவை, இனத்தார், நட்பினர். ம.கூட்டம், தெ. கூட்டமு, க.,து.கூட்ட

கூடு - கூடம் = பலர் கூடுமிடம், நீண்ட பேரறை, பட்ட சாலை. எ - டு : பள்ளிக்கூடம், வீட்டுக்கூடம், தொழிற்கூடம். கூடம்-வ. கூ(ட்)ட

கூட்டம் - குட்டம் = 1. திரள். 'அழற்குட்டம் போல்" (சீவக.10 :79). 2. அவை. "படைக்கலம் பிடித்துக் குட்டத்துக்குச் செல்லப் பெற்றார்” (T.A.S. Vol. I. 9).

கூடல் = 1. கூடுதல். 2. பொருந்துகை. 3. ஆறு கடலொடு கூடுமிடம். "மலியோதத் தொலிகூடல்” (பட்டினப். 98). கூடலூர் (Cuddalore). முக்கூடல் = மூவாறுகள்கூடுமிடம். 4. தலைவனைப் பிரிந்த தலைவி அவன் வருங் குறியறிய மணலில் இழைக்கும் கூடற்சுழி. 'நீடலந்துறையிற் கூட லிழைத்தது’” (திருக்கோ. 186).

5. புலவர்கழகம். 6. கழகமிருந்த மதுரை. “கூட னெடுங்கொடி யெழவே” (கலித். 31). 7. தோப்பு. “செயலைக் கூடலே” (இரகு. தேனுவந். 70).