உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 18.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22

வேர்ச்சொற் கட்டுரைகள்

கூட்டு = திரள், இனம், நட்பு, உறவு, துணை, கலப்பு, கலவை, சேர்ப்பு, ஒப்பு, கூட்டுத்தொழில், கூட்டுக்கறி. ம. கூட்டு.

கூட்டர் = தோழர், இனத்தார், ம.கூட்டர்.

கூட்டரவு

=

கூடிப் பழகுதல். "போத மிக்கவர் கூட்டரவு”

(ஞானவா. முமுட். 25).

கூட்டாளன் = கூட்டாளி. ம. கூட்டாளன்.

கூட்டாளி = நண்பன், பங்காளி, ஒத்தவன். ம. கூட்டாளி.

கூட்டுறவு = கூடியுறவாடல், கூடித் தொழில் செய்தல். கூட்டுறவுக் கழகம் (Co-operative Society).

கூட்டுச் சொல்

(compound word).

=

ஒருசொற் றன்மைப்பட்ட இணைச்சொல்

கூட்டெழுத்து = 1. விரைவாகக் கூட்டி யெழுதுங் கையெழுத்து (running hand). 2. பல மெய் இணைந்த வடவெழுத்து (conjunct sonsonant).

=

குள்- கொள். கொள்ளுதல் = பொருந்துதல். "கொள்ளாத கொள்ளா துலகு” (குறள். 470).

6

கொள்- கொள்ளை = 1. கூட்டம். “கொள்ளை யிற்பலர் கூறலும்” (கந்தபு. விண்குடி. 14). 2. மிகுதி. "கொள்ளைமா மதத்த நால்வாய்க் குஞ்சரம்” (பாகவ. 1: 15:14).

கொள்ள = நிரம்ப. உணவு கொள்ளக் கிடைத்தது. கொள்- கோள் = குலை. "செழுங்கோள் வாழை” (புறம். 168 : 13). “கோட்டெங்கிற் குலைவாழை” (பட்டினப். 16).

கோள்- கோட்டி = 1. கூடியிருக்கை. “தன்றுணைவி கோட்டியினி னீங்கி” (சீவக. 1035). 2. கூட்டம் (பிங்.). 3. அவை. “தோமறு கோட்டியும்” (LDGCLD. 1:43).

கோள்-கோடு- கோடகம் = பல தெருக் கூடுமிடம் (பிங்.). கோடு கோடி கோடித்தல் = கட்டுதல், அமைத்தல். "கடிமண் டபமுன் கோடிப்ப” (காஞ்சிப்பு. திருமண. 4).

1. ஒப்புமை

கிளைக் கருத்துக்கள்

கள்ள, கடுப்ப என்பவை தொல்காப்பியத்திற் குறிக்கப் பட்டுள்ள உவமையுருபுகள் என்பது முன்னர்க் கூறப்பட்டது. கணத்தல் = கூடுதல்,