உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 18.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'குல்' (கூடற் கருத்துவேர்)

=

=

23

பொருந்துதல், ஒத்தல். குரங்கு கணக்க ஓடுகிறான் என்பது நெல்லை வட்டார உலகவழக்கு. கூட்டு ஒப்புமை. "மடங்கல் கூட்டற வெழுந்தெரி வெகுளியான்” (கம்பரா. அதிகாய. 1). கெழுவ என்பது ஓர் உவமையுருபு (தொல். பொருள். 286, உரை). குழுகெழு கேழ் ஒப்பு. "கேழே வரையுமில்லோன்" (திருக்கோ. 269). கொள்ளுதல் = ஒத்தல் “வண்டினம் யாழ்கொண்ட கொளை” (பரிபா. 11 : 125), இனத்தோடே, வெள்ளாடு தன்னோடே” என்னும் முறைமைபற்றிக் கூடுதற் கருத்தில் ஒப்புமைக் கருத்துப் பிறந்தது.

2. பன்மை

‘இனம்

பன்மை பல்பொருட் கூட்டமாதலால், கூடுதலைக் குறிக்கும் கள்ளுதல் என்னும் வினைச்சொல்லினின்று 'கள' என்னு ம் பன்மையுருபு அமைக்கப்பட்டது.

அவர்கள்.

3.நிறைவு

டு: மக்கள் (மக + கள்), மரங்கள், விலங்குகள்; யாங்கள், நீங்கள்,

பன்மையால் நிறைவுண்டாகும். கழுமுதல் = நிறைதல். கெழுவுதல்

= நிறைதல்.

4.மிகுதி

அளவிற்கு மிஞ்சின பன்மையே மிகுதி. கூடுதல்

கழுமுதல் = மிகுதல்.

ஒ. நோ : நிரம்ப = நிறைய, மிக.

5. கோது

கசண்டு

=

மிகுதல்.

ஒரு நீர்ப்பொருட் கலத்தில் அடியில் தங்கிச் செறிவதனாலும், கழிபொருளான குப்பையிற் பலவகைப் பொருள் கலப்பதாலும், செறிதல் அல்லது கலத்தற் கருத்தினின்று கழிபொருட் கருத்துத் தோன்றிற்று. கூளம் = திப்பி, மண்டி (dreg = sediment). ஒ.நோ : மண்டு - மண்டி, மண்டுதல் - செறிதல். கூளன் = பயனற்றவன். 'உழை பேணாக் கூளன்" (திருப்புகழ். 109). கூளி = குற்றம் (சூடா.). குப்பைகூளம் என்னும் வழக்கை நோக்குக.

6. கணக்கு

கூட்டல் கழித்தல் பெருக்கல் வகுத்தல் என்னும் நால்வகைக் கணக்குள், முதலாவது தோன்றியது கூட்டற் கணக்கே.