உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 18.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24

வேர்ச்சொற் கட்டுரைகள்

கணக்கு

கூடு கூட்டல். கணத்தல் = கூடுதல். கண கூட்டு, கூட்டுத்தொகை, மொத்த அளவு, அளவு, வரம்பு, கூட்டற்கணக்கு, கணக்கு. கணக்கு - கணக்கன், கணக்கப்பிள்ளை.

7. புணர்ச்சி

காதலன் காதலியர் மெய்யுறக் கூடல் புணர்ச்சி. “பெரிதாற்றிப் பெட்பக் கலத்தல்” (குறள். 1276). "கலவியான் மகிழ்ந்தாள்போல்” (சிலப். 7: 24, கட்டுரை). “கூடலிற் காணப் படும்” (குறள். 1327). “காமக் கூட்டங் காணுங் காலை” (தொல். பொருள். கள. 1). கணவன் = கூடுவோன். கடுவன் = ஆண்குரங்கு.

8. பொருத்து

கூளி = பொலிகாளை. உறுப்புகள் அல்லது அவற்றின் பகுதிகள் ஒன்றோடொன்று கூடுவது பொருத்தாகும். கலவு = உடலின் மூட்டுவாய். "கலவுக்கழி கடுமுடை” (அகம்.3).

கள் - களம் = உடல் முண்டத்தைத் தலையொடு பொருத்தும் உறுப்பாகிய 1. கழுத்து. 2. தொண்டை. “பாடுகள மகளிரும்” (சிலப். 6 : 157). கள் - (கண்டு) கண்டம் கழுத்து, தொண்டை. “காராருங்

கண்டனை” (தேவா. 1071 : 1).

=

களம் -வ. gala. L. collum. கண்டம் - வ. கண்ட (kantha.)

கண் - கணு. கட்டு - கட்டாணி = அணிகளின் கடைப் பூட்டாணி. குயில் - கயில் = பூண்கடைப்புணர்வு (திவா.). கயில் - கயிறு = கட்டுவது. ம். கயறு

9. நெயவு

6

நெடுக்கிழையுடன் ஊடையைப் பொருத்திப் பின்னுவது நெயவு. குயிலுதல் = 1. நெய்தல். "ஊசியொடு குயின்ற தூசும் பட்டும்” (தொல். சொல். 74, உரை). 2. பின்னுதல். குயில் - குயினர் = தையற்காரர் (பிங்.). கோடி கோடிகம் = ஆடை. கோடிகர் = ஆடை நெய்வோர் (பெருங். இலாவாண. 8 867).

10. Curi

மாறுபட்ட இருவர் அல்லது இரு கூட்டத்தார் கலந்தே போர் செய்வர். கைகலத்தல் என்னும் வழக்கை நோக்குக. கல- கலகு = கலகம். கலகித்தில் = கலகஞ்செய்தல். கலகம் - கலாம். கலாய்த்தல் = சினத்தல், மாறுபடுதல். கலாவுதல் = சினத்தல். கலாவு- கலாவம்- கலாபம் = கலகம். ஐதர் கலாபம். கலாபித்தல்- கலகஞ்செய்தல். கலாபி - கலாபனை- தெ. கலாபன. கூட்டம் = போர் (திவா.).