உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 18.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'குல்' (கூடற் கருத்துவேர்)

11.கலங்கல்

கலங் கலகு- கு

25

நீரும் மண்ணுங் கலத்தல் கலங்கல். கல கலங்கல். கல- கலுழ். கலுழ்தல் = கலங்கல். கலுழ் = நீர்க்கலக்கம். கலுழி = கலங்கனீர். கலுழ் - கலிழி = கலங்கனீர். கலுழி- கலிழி. கலுழ்- கலுழம் கலுடம் - வ. கலுடி.

12.கலக்கம்

ஒரு வழியோடு பிறவழிகள் கலக்கும்போதும், அமைதியான மனத்திற் துயர் கலக்கும் போதும் ஒரு செய்திபற்றிப் பல கருத்துகள் எழும்போதும் மனங் கலங்கும். கலங்கு - கலக்கு - கலக்கம். கலக்கு (பி.வி)- ம. கலக்கு, க. கலக்கு, தெ. கலத்சு. கலக்கு (பெ.)- க. கலக்கு, தெ. கலக்குவ. கலக்கம் (தொ.பெ.)- ம. கலக்கம், தெ. கலக்க.

கலுழ்தல் = மனங்கலங்குதல். கலவரித்தல் = கலங்குதல். கலதை, கலவரம், கலவரை என்பன கலக்கங் குறிப்பன. கலவரம்- தெ. கலவரமு, க. கலவள். கழுமுதல் = மயங்குதல். குழம்புதல் = கலங்குதல். ம. குழம்பு. குழம்பு- குழப்பு- குழப்பம் = தாறுமாறு, அமைதியின்மை. கோழம்பம் குழப்பம்.

=

13. திரட்சி

கண்டம் =

=

பல பொருள்கள் ஒன்றாகச் சேரின் திரட்சியுண்டாகுமாதலால், கூடுதற் கருத்தில் திரட்சிக் கருத்துத் தோன்றும். குள் - குளம்பு விலங்குகளின் திரண்ட காலுகிர். குழு - குழை = திரண்ட காதணி. குழு- கழு - கழுகு = பெரும்பறவை. கழு முரகு = மிகப் பெரிது. குள்- குண்டு - கண்டு கட்டி, நூற்றிரளை. கண்டு பெரிய துண்டு. கணைக்கால் = திரண்ட கெண்டைக்கால். கணை = திரண்ட பிடி. கணையம் = திரண்ட எழு. குறடு = திண்னை. குண்டை (காளை), குண்டாந்தடி, குண்டடியன் (ஆண்சிவிங்கி), குண்டுக்கழுதை என்பனவும் திரட்சி பற்றியனவே.

=

=

14. பருமை

திரட்சியாற் பருமையுண்டாம்.

குரு = பருமை. "குரூஉக்களிற்றுக் குறும்புடைத்தலின்” (புறம். 97). கூளி = பெருங்கழுகு. கூளிப்பனை = தாளிப்பனை.

15. கனம்

=

திரட்சியாலும் பருமையாலும் கனமுண்டாம். குரு கனம். 'பசுமட் குரூஉத் திரள்” (புறம். 32). (குல்)- கல் = கனமுள்ளது.

க., ம., கல்.தெ., து. கல்லு.