உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 18.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3

குல்' (தோன்றற் கருத்துவேர்)

தோன்றற் கருத்தினின்று இளமை, மென்மை, சிறுமை, குறுமை முதலிய கருத்துகள் கிளைக்கும்.

குல் - குன் - குன்னி = சிறுபிள்ளை, சிற்றுயிரி, சிறு பொருள். 'நன்னியுங் குன்னியும்' என்பது பாண்டிநாட்டு உலக வழக்கு.

குல்-குள்-

குல் - குள்- குளகு = 1. இளந்தழை. “வாரணமுன் குளகருந்தி” (கலித். 42). 2. விலங்குணா. "மறிகுள் குண்டன்ன மன்னா மகிழ்ச்சி” (நாலடி. 17). "இலைநுகர் விலங்கு ணாவே குளகென வியம்ப லாகும்” (சூடா. 6:32). 3. தழையுடை. “குளகரைச் சுற்றிய குறம டந்தையர்” (காசிகண்.44:16). 4. இலைக்கறி.(W).

1).

குளகு- குளகன் = இளைஞன். குளகன் வந்துழி” (கந்தபு. குமார.

குள- குழ = இளமையான. “மழவுங் குழவும் இளமைப் பொருள” (தொல். உரி. 14). குழ - வ. குட (guda).

குட என்னும் வடசொல்லினின்று குழ என்னுந் தென்சொல் திரிந்துள்ளதாகச் சென்னைப் ப.க.க.த. அகரமுதலி தலைகீழாகக் காட்டியுள்ளது.

குழ - குழவு = இளமை.

- =

குழவு - குழவி = 1. இளஞ்சேய், கைக்குழந்தை. “ஈன்ற குழவி முகங்கண்டிரங்கி” (மணிமே. 11 : 114). 2. யானை, ஆவு, எருமை, கடமை, மரை, குரங்கு, முசு, ஊகம் முதலிய விலங்கின் இளமைப் பெயர். (தொல். மரபு, 19 - 23). 3. ஓரறிவுயிரின் இளமைப் பெயர். “வீழில் தாழைக் குழவி” (தொல். மரபு, 24, உரை). 4. ஒரு குறுமைப் பொருள் முன்னொட்டு. “குழவித் திங்கள்” (தொல். மரபு. 24, உரை).

ஒ.நோ: Ecule, F. cule, L. culus, cula, culum - clim. suf. E. cule – cle, cel etc.