உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 18.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28

வேர்ச்சொற் கட்டுரைகள்

குழ- குழந்து- குழந்தை = 1. கைப்பிள்ளை. “குழந்தையை யுயிர்த்த மலடிக்கு" (கம்பரா. உருக்கா. 65). 2. நடை பழகுஞ் சிறுபிள்ளை. 3. இளம்பருவம். “குழந்தை வெண்மதி” (கம்பரா. ஊர்தேடு. 209).

ஒ.நோ: Eclid, E. child. c = k.

குழவு - குழகு = 1. குழந்தை. 'குழகென வெடுத்துகந்தவுமை’ (திருப்பு. 106).2. இளமைச் செவ்வி. "கொம்மைக் குழகாடுங் கோலவரை மார்பர்” (சீவக. 2790). 3. அழகு. "கொன்றை சூடிக் குழகாக..... விளையாடும்” (தேவா. 468 : 7)

குழகு- குழகன் = 1. இளைஞன். “நின்மணக் குழகன்” (திருவிளை. திருமண. 44). 2. அழகன். “கொட்கப் பெயர்க்குங் குழகன்” (திருவாச. 3: 12). 3. முருகன். (பிங்.). 4. பிறர்க்கிணங்கு பவன். “குரவை கோத்த குழகனை” (திவ். திருவாய். 3:6:3).

குழமகன்

=

= 1. இளம்பருவத் தலைவன். "குழமகனைக் கலி வெண்பாக் கொண்டு..... விளங்க வுரைத்தாங்கு” (இலக். வி. 858). 2. பெண்டிர் குழமகனைப் புகழும் பனுவல் (தொன். 283). 3. மரப்பாவை. “உத்தரியப் பட்டுங் குழமகன் றனக்கு நல்கி” (பாரத. நிரைமீ. 136).

குழ - குழை = தளிர். “பொலங்குழை யுழிஞை” (புறம். 50). க.கொழச்சி.

குழ - குழலை குதலை = 1. மழலைச் சொல். “தம்மக்கள் மழலைச்சொற் கேளா தவர்” (குறள். 66). 2. இனிய மொழி. “குதலைச் செவ்வாய்க் குறுந்தொடி மகளிர்” (சிலப். 30: 114). 3. அறிவிலான் (திவா.).

மொழி.

ஒ.நோ : மழ மழலை - மழலை - மதலை = குழந்தை, மகன், மழலை

-

குழ குழந்து - கொழுந்து = 1.இளந்தளிர். “ஏற்ப விரீஇய இலையுங் கொழுந்தும் ” (பெருங். இலாவாண. 2: 143). 2. இளமையானது. “பிறைக்கொழுந்து ” (நைடத. அன். தூது. 12). 3. மென்மை. “வாழையுற்ற - கோதிலா மடலே போலக் கொழுந்துள செவிய தாகி” (சூடா. 12: 150). 4. மென்மையான மருக்கொழுந்து. “கொழுந்து செவ்வந்தி” (கந்தபு. இந்திரன்கயி. 42). 5. படையின் முன்னணி. “சேனையின் கொழுந்துபோய்க் கொடிமதின் மிதிலையி னெல்லை கூடிற்றே” (கம்பரா. எழுச்சி. 24). 6. கவரிநுனி. “கொழுந்துடைய சாமரை” (கம்பரா. கோலங். 25).