உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 18.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32

வேர்ச்சொற் கட்டுரைகள்

சிறுமைக் கருத்தும் குறுமைக் கருத்தும்

குஞ்சுக் கடகம் = சிறிய ஓலைப்பெட்டி.

=

குஞ்சுச்சிப்பி = சிறிய முத்துச்சிப்பி. குஞ்சுப் பெட்டி = சிறிய பெட்டி

(uniů.).

குஞ்சம் = 1. குறள். (திவா.). 2. குறளை (திவா.). 'குப்ஜ' என்னும் வடசொல்லை இதற்கு மூலமாகச் சென்னைப் ப. க. க. த. அகரமுதலியிற் குறித்திருப்பது தவறு. வளைந்தது என்பதே வடசொற் பொருள். 3. குன்றிமணி (திவா.).

குஞ்சன் = குறளன் (பிங்.).

=

குஞ்சி = குன்றிமணி. குஞ்சிப்பெட்டி = சிறுபெட்டி. குஞ்சிக்கூடை சிறுகூடை (W.). குஞ்சு - கொஞ்சு - கொஞ்சம் = சிறிது. "கொஞ்சந்தங் கின்பந் தந்து” (திருப்பு. 609).

_

ம. கொஞ்சம், தெ. கொஞ்செமு, க. கொஞ்ச, து. கொந்த்ர. கொஞ்சன் = புல்லன்(அற்பன்). “வஞ்சன்கொஞ்சன்” (திருப்பு. 609). கொச்சு = சிறிது, சிறிய.

கொசு = மிகச் சிறிய ஈவகை. கொசு - கொசுகு கொசுகு. 'கொசுகீ.... எய்திடம்” (காசிகண். 40 : 17).

381 : 9).

கொசுகு-கொதுகு. "கொதுகறாக் கண்ணி னோன்பிகள்” (தேவா.

ம. கொதுகு.

குள் - குண் - குணில் = 1. குறுந்தடி. “கரும்பு குணிலா மாங்கனி யுதிர்க்கும்” (ஐங். 87). 2. பறையடிக்குங் குச்சு. “குணில்பாய் முரசி னிரங்கு மருவி” (புறம். 143).

குதலி - கதலி = சிறுகாய் வாழை. மொந்தன் வாழைக்கு எதிரானது. “நெட்டிலைப் பைங்கதலி” (திருக்காளத். பு. தாருகா. 15).

குருவி = 1. சிறு பறவைவகை. 'குருவி சேர்வரை” (சீவக. 2237).2. குன்றிமணி (மலை.).

குருவிக்கண் = 1. சிறுகண். 2. சிறுதுளை. குருவித்தலை = சிறுதலை. குருவித் தேங்காய் = சிறு தேங்காய்.

குள்- குள்ளம் = 1. குட்டை. 2. குறள்.

குள்ளல் = குள்ளம். குள்ளை = குள்ளம்.