உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 18.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குல்' (தோன்றற் கருத்துவேர்)

குள்ளன் = 1. குட்டையன். 2. குறளன்.

33

ம. குள்ளன். குள்ள- வ. குல்ல (kh) - குல்லக, குல்லக்ஷுல்ல க்ஷுல்லக.

குள்ளை- கூழை = 1. குட்டை, குட்டையானது. “நாய்கூழைவாலாற் குழைக்கின்றது போல” (திவ். திருவாய். 9:4:3). 2. மதிக்குறைவு. “கூழை மாந்தர்தஞ் செல்கதி” (தேவா. 462:9). 3. கூழைத் தொடை. “ஈறிலி கூழை” (யா.கா.உறுப். 19). 4. குள்ளப் பாம்பு.

தெ.கூள, க.கூழெ, மராத். கூள (kh).

குள் - குள்கு - குட்கு - குக்கு. குக்குதல் = உடம்பைக் குறுக்கி குள்-குள்கு - குட்கு-குக்கு . வைத்தல். ஒ. நோ: வெள்கு- வெட்கு, சுள்- சுள்கு- சுட்கு- சுக்கு. குக்கு - குக்கல் = சிறு நாய்வகை. “குக்கலைப் பிடித்து நாவிக் கூண்டினிலடைத்து வைத்து ” (வி. சிந்.).

தெ. குக்க, வ. குக்குர.

குக்கல் - குக்கன் = சிறு நாய்வகை (திவா.).

குக்கர் = நாய்போ லிழிந்தோர். “குடிமையிற் கடைமைப் பட்ட குக்கரில்” (திவ். திருமாலை. 39).

குட்டம் = 1. குறுமை. 2. செய்யுளடிக் குறுமை. "குட்டமும் நேரடிக் கொத்தன வென்ப (தொல். செய். 114).

கட்டுதல்

குட்டான் = 1. சிறு படப்பு. 2. சிறிய ஓலைப்பெட்டி. குட்டான் பறவை கொத்தாதபடியும் அணில் கடியாத படியும் காய்களின்மீது மூடி கட்டுதல்.

=

குட்டான்

ஓலைப்பெட்டி.

கொட்டான்

=

சிறு நார்ப்பெட்டி அல்லது

கொட்டான் + காய் + சில் = கொட்டாங்காய்ச்சி- கொட்டாங்கச்சி= கொட்டான் பெட்டி போன்ற தேங்காயோட்டுத் துண்டு.

=

குட்டி = சிறியது. குட்டிக்கலகம், குட்டிக்கிழங்கு, குட்டிச் சாத்தன், குட்டிச்சுவர், குட்டித் திருவாசகம், குட்டித் தொல்காப்பியம், குட்டிப்புல், குட்டிமணியம், குட்டியாண்டவன், குட்டிவிரல், குட்டித் தெய்வம் (சாமி) என்பன சிறுமை குறித்தன.

குட்டு - குட்டை = 1. குறுகிய உருவம். 2. குட்டேறு (சிறிய காளை). குட்டேற்றைக் கோவர்த்தனனைக் கண்டீரே” (திவ். நாய்ச். 14:2). 3. சிறு துணி. எ - டு : தலைக்குட்டை, கைக்குட்டை. தெ.குட்ட (gudda). 4.