உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 18.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34

வேர்ச்சொற் கட்டுரைகள்

சிறுகுளம். 5. குட்டை மரம் (தொழுமரம்). 6. குறுணி. (தொல். சொல். 400, உரை).

குட்டை - கட்டை = 1. உயரக் குறைவு. எ 1. உயரக் குறைவு. எ - டு : ஆள் கட்டை, கட்டைமண். 2. அகலக் குறைவு. எ - டு : அகலக் கட்டை. 3. நீளக் குறைவு. எ - டு : கட்டைவிரல், கட்டைத் துடைப்பம், துடைப்பக் கட்டை. 4. மதிப்புக் குறைவு. எ - டு : விலைக்கட்டை, கட்டைப் பொன், மாற்றுக் கட்டை. 5. ஓசைக் குறைவு. எ - டு : கட்டைக் குரல் (சாரீரம்). 6. ஒருவகை இசைக் குற்றம்.

"தனிபடு கட்டை யெட்டின் றகுதியிற் றிகழும் பொல்லா

வினிமையில் சுரத்தைக் கண்டாங் கிருந்தவர் வியந்தா ரில்லை” (திருவால.57: 26)

7. திறக்குறைவு. எ - டு : கட்டைமதி (புத்தி).

இதன் மூலத்தை அறியாது மரக்கட்டை, விறகுக் கட்டை, செப்புக்கட்டை முதலியவற்றின் தடிப்பத்தைக் குறிக்கும் கட்டை யென்னும் சொல்லோடு இணைத்துள்ளது, சென்னைப் ப. க. க.த. அகரமுதலி.

முச்சில்.

குரு - குறு = 1. சிறு. 2. குறுகிய. ம. குறு.

குறு - குற்றி = சிறு குச்சு. குற்றி - குச்சி- குச்சு.

குறு + இல் = குற்றில்- குச்சில். ஒ. நோ : முறம் + இல் = முற்றில்-

குச்சில் - குச்சு. குச்சுவீடு = சிறு கூரைவீடு.

குறு - குற்று - குற்றம் = குறைவு, தவறு.

குறு- குறை- குறைவு = குறைச்சல்.

குறுமகன்- குறுமான் = சிறுவன். குறுஞ்சிரிப்பு- குஞ்சிரிப்பு.

குறு- குறள். 1. குறுமை. “குண்டைக் குறட் பூதம்” (தேவா. 944:1). 2. குறட்பூதம் (பிங்.). 3. ஈரடி உயரமுள்ள குள்ளன். "தேரை நடப்பனபோற் குறள்” (சீவக. 631). 4. சிறுமை. “வரகின் குறளவிழ்ச் சொன்றி’” (பெரும்பாண். 193). 5. இருசீர் கொண்ட குறளடி. 6. ஈரடி கொண்ட குறள்வெண்பா. 7. குறள் வெண்பாவாலான திருக்குறள். "உலகங் கொள்ள மொழிந்தார் குறள்” (திருவள்ளுவ. 33). ம. குறள்.

குறள்- குறளி = 1. குறியவள். "ஒரு தொழில் செய்யுங் குறளி வந்து” சீவக. 1653, உரை). 2. சிறிய குறளிப் பேய். "வாயி லிடிக்குது குறளியம்மே” (குற்றா. குற. 71). 3. குறளி வேடிக்கை. 4. கற் பழிந்தவள் (LIT.).