உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 18.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குல் (தோன்றற் கருத்துவேர்)

=

35

குறள் - குறளை = 1. குள்ளம். (W). 2. சிறுசொல், கோட்சொல். "பொய்யே குறளை கடுஞ்சொல் பயனில் சொல்லென” ‘மணிமே. 30 : 68). 3. வறுமை. "குறளையுள் நட்பளவு தோன்றும்” (திரிகடு. 37). 4. பழிச்சொல்.

ம். குறள்

குறு - குறில் = குற்றுயிரெழுத்து.

குறுணி = பதக்கினும் குறைந்த முகத்தலளவு.

குறும்பு = 1. சிறு துணுக்கு. எ - டு : புகையிலைக் குறும்பு. 2. சிறுமலை. 3. சிறுமலை யரண். “குறும்பல் குறும்பிற் றதும்ப வைகி” (புறம். 177). 4. மலையரணிலுள்ள குறுநில மன்னர். 'குறும்படைந்த வரண்' (புறம். 97). 5. வேந்தருக்குப் பகைவரான குறும்பரசர். வேந்தலைக்கும் கொல்குறும்பும் இல்லது நாடு" (குறள். 735). 6. குறும்பரசரின் வலிமை. “அரவுக் குறும் பெறிந்த சிறுகட்டீர்வை”. 7. குறும்பரசர்

6

போர்.

8. குறும்பரசரின் குறும்புத்தனம், தீய விளையாட்டு. 9. குறும்பரசர் ஆண்ட பாலைநிலத்தூர். 10. பாலைநில மாந்தர். 11. குறும்பர் என்னும் வகுப்பார். எ-டு : காட்டுக் குறும்பு, நாட்டுக் குறும்பு.

குறும்பாடு - குறும்பர் மேய்கும் ஆடு.

குறும்பன் = குறும்புத்தன முள்ளவன்.

குறு- குறுகு. குறுகுதல்- குட்டையாதல்.

ம. குறுகு, தெ. குருச்ச.

குறுகு - குறுக்கு = 1. குறுமை. “நீண்ட நெடுமையும் அகலக் குறுக்குங் காட்டா” (தாயு. சிதம்பர. 13). 2. நீளத்திற்கு எதிரான அகலம். 3. குறுக்களவு. “நெடுமையுங் குறுக்கு நூற்றெட்டங்குலம்” (காசிகண். சிவ. அக. 17). 4. முதுகின் குறுக்கு. குறுக்குப் பிடித்துக் கொண்டது; நிமிர முடியவில்லை (உ. வ.). 5. ஊடு, இடை. டை. நான் பேசும்போது குறுக்கே ஒன்றும் சொல்லாதே (உ. வ.). 6. மாறு, எதிர்ப்பு. அவன் எதற்குங் குறுக்காகப் பேசுவான் (உ.வ.).

குறுக்கு - குறுக்கம் = 1. குறுமை. “ஐ ஒளக் குறுக்கம்” (நன். 99).2. 3/4 முதல் 7 செய் (ஏக்கர்) வரை வெவ்வேறிடத்தில் வெவ்வேறு வகையாக வழங்கும் நில அளவு.

குறுவை- குறுகிய காலத்தில் விளையும் நெல்.

குறுமல் = பொடி (பிங்.).

குல் - குன்-குன்று.