உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 18.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36

வேர்ச்சொற் கட்டுரைகள்

குன்றுதல் = 1. குறைதல். 2. சுருங்குதல். 3. தளர்தல். 4. நிலை கெடுதல். "குன்றி னனையாருங் குன்றுவர்” (குறள். 965).

குன்று = சிறுமலை. குன்று- குன்றம் = பெருங்குன்று. ம. குன்னு- குன்னம். தெ., க. கொண்ட. குன்றி = சிறிய குன்றிமணி. “குன்றுவ குன்றி யனைய செயின்” (குறள். 965). ம.குன்னி.

குன்- குன்னு. குன்னுதல் = குக்குதல், உடம்பு சுருங்குதல்.

குன் - குன்னா. குன்னாத்தல் = உடம்பு குளிரால் ஒடுங்குதல். “குன்னாக்க வென்பாரு முளர்” (நெடுநல். 9, உரை).

குன் - குன்னி = சிறியது, நுண்ணியது.