உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 18.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38

வேர்ச்சொற் கட்டுரைகள்

குளிகை = மாத்திரை யுருண்டை. வ. குளிகா(gulika).

=

குளியம் - குழியம் = 1. வளைதடி. 2. மணவுருண்டை. (சிலப். 14: 171. அரும்.). திரட்சி (திவா.). L. globus, glomus E.globe.

குழலுதல் = சுருளுதல். “கடைகுழன்ற கருங்குழல்கள்” (சீவக. 164). குழல் = மயிர்க்குழற்சி. “குழலுடைச் சிகழிகை” (சீவக. 1092).

ம.குழல்.

குள் - (குய்) - குயம் = வளைந்த அரிவாள். "கொடுவாய்க் குயத்து” (சிலப். 10:30).

குல்- (குர்)- குரங்கு. குரங்குதல் = வளைதல். "இலைப் பொழில் குரங்கின” (சீவக. 657). குரங்கு = வளைவு. "குரங்கமை யுடுத்த மரம்பயி லடுக்கத்து” (சிலப். 10: 157). 2. கொக்கி. OE. cranc, crinc, E. crank.

குரவை = வட்டமாக நின்று பாடியாடுங் கூத்து.

Gk. koros (orig. a dance in a ring). L. chorus, E. chorus, choir, quirs.

குருளுதல் = சுருளுதல். "குருண்ட வார்குழல்” (திருவிசை. திருவாலி. 1:3). குருள் = 1. மயிர்ச்சுருள். 2. பெண்டிர் தலைமயிர் (பிங்.). வ.குருல. LG., Du., O. Fris. krul, G. krol, OE. crol, crul, E. curi.

குருகு = 1. வளையல். “கைகுவி பிடித்துக் குருகணி செறித்த’” (கல்லா. 44 : 22). 2. வளைந்த கழுத்துள்ள நீர்ப்பறவைப் பொது. 3. நாரை. "வான்பறைக் குருகின் நெடுவரி பொற்ப" (பதிற். 83: 2). 4. ஓதிமம் (அன்னம்). “நீரொழியப் பாலுண் குருகிற் றெரிந்து” (நாலடி. 135).

குரகம் = நீர்வாழ் பறவைப் பொது.

AF., OF. grue (crane), OHG., OS. krano, OE. cran, E. crane.

=

குரங்கு - குறங்கு = கொக்கி. குறங்கு - கறங்கு. கறங்கல் 1. வளைதடி (அக. நி.). 2. சுழற்சி (பிங்.). கறங்குதல் 1. சூழ்தல். “கறங்கிருள் மாலைக்கும்” (திருவள். 34). 2. சுழலுதல். “பம்பரத்து.... கறங்கிய படிய” (கந்தபு. திருநகரப். 28). ம. கறங்ஙு.

கறங்கு = காற்றாடி. “காண்முக மேற்ற

கணபதி). கறங்கோலை = ஓலைக்காற்றாடி.

கறங்கும்” (கல்லா.

"கறங்கோலை கொள்ளிவட்டம்” (திருமந். 2313).

ON. hringr, OHG., OS., OE. hring, E. ring.

=