உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 18.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2

குல்= (வளைதற் கருத்துவேர்)

39

குர்- குறு - குறள் - குறண்டு. குறண்டுதல் = 1. வளைதல். 2. சுருண்டுகொள்ளுதல். குறண்டல் = கூனல்.

குறடு = வளைந்த பற்றுக் கருவி, குறடுபோற் பற்றும் நண்டு. தெ. கொரடு.

குறழ்தல் = குனிதல். அவனாங்கே பாராக் குறழா” (கலித். 65 : 10). குறு- கிறு- கிறுக்கு = தலச்சுற்று, கோட்டி (பைத்தியம்). கிறுக்கன் = பித்தன். தெ. கிறுக்கு.

கிறுகிறுத்தல் = சுற்றுதல், தலைச்சுற்றால் மயக்கமாதல். தெ. கிரகிர (giragira). கிறுகிறுவாணம் = காற்றாடிபோற் சுற்றும் பொறிவாணம். Gk. guros, E.gyrate.

குல் - குன்-குனி. குனிதல் = 1. வளைதல். "குனிவளர் சிலை” (சீவக. 486). 2. உடம்பு வளைதல். 3. வணங்குதல் (சூடா.).

குனித்தல் = வளைத்தல். “குனித்த புருவமும்” (தேவா. 11 : 4). ம.குனி,க. குனி.

குனுகுதல் = சிரிக்கும் போது முதுகு வளைதல். தெ. குங்கு.

குள் - குண்டு = உருண்டை, உருண்டையான மணி, உருண்டை யான வெடிகருவி (shot. bullet).

தெ. குண்ட, க., மரா. குண்ட (gunda).

,

குண்டூசி. குண்டுச்சம்பா, குண்டுமல்லிகை என்பவற்றில் குண்டு என்னுஞ் சொல் உருட்சி பற்றியது. உருட்சிக் கருத்தும் திரட்சிக் கருத்தைத் தோற்றுவிக்குமாதலால், குண்டு, குண்டன், குண்டை, குண்டாந்தடி, குண்டடியன், குண்டுக்கழுதை என்பவற்றை வளைவுக் கருத்து வேரடிப் பிறந்தனவாகவும் கொள்ள இடமுண்டு.

குண்டான்

= உருண்ட வடிவான கலம். குண்டான் சட்டி என்பது வழக்கு. குண்டான்- குண்டா. மரா. குண்டா(g).

ஒருவன் சுருண்டு கிடக்கும் நிலை குண்டக்க மண்டக்கம் என்றும், ஒருவனைத் தலையுங்காலுஞ் சேர்த்துச் சுருட்டிக் கட்டும்வகை குண்டு ருட்டுக் கட்டு என்றும் சொல்லப்படும்.

குண்டு - குண்டலம் = 1. வட்டம். 2. சுன்னம். 3. வட்டமான காயம் (ஆகாயம்). 4. வளைந்த காதணி. வ. குண்டல.