62
குருத்து- குருந்தம் = மாணிக்க வகை (W.).
வேர்ச்சொற் கட்டுரைகள்
குருந்தம் - குருவிந்தம் = 1. தாழ்ந்த மாணிக்க வகை. (சிலப்.14: 186, உரை). 2. குன்றிமணி. 3. சாதிலிங்கம்.
குருவிந்தக்கல் = காவிக்கல். "இரத்தின மறியாதா னொருவன் குருவிந்தக் கல்லோடொக்கும் இதுவென்றால்” (ஈடு. 3:1:2).
பஃது.
குருவிந்தம்-வ. குருவிந்த.
குல் - குது. ஒ.நோ: மெல்- மெது- மெத்து, பல் - பது- பத்து-
குது - குதம் = வெங்காயம் (மலை.).
குதம் - குதம்பு. குதம்புதல் = 1. கொதித்தல். 2. சினத்தல்.
குதம் - கதம் = 1. சினம். "கானுறை வாழ்க்கைக் கதநாய் வேட்டுவன்" (புறம். 33). 2. பஞ்சம். கதம் பிறந்தது (உ.வ.)- W.
கதகதப்பு = 1. வெம்மை. “கதகதென் றெரியுதே காமாக்கினி” (இராமநா. ஆரணி. 8). 2. இளவெம்மை. மழைக்காலத்தில் கூரைவீடு கதகதப்பாயிருக்கும் (உ. வ.).
கதம் - கதவு. கதவுதல் = சினத்தல். "கதவிக் கதஞ்சிறந்த கஞ்சன்” (திவ். இயற். 2 : 89).
- 19).
கதவு = சினம். "அவன் யானை மருப்பினுங் கதவவால்” (கலித். 57
கத கதழ்
―
=
கதழ்வு. கதழ்தல் 1. சினத்தல் (திவா.). 2. விரைதல். 'கதழெரி சூழ்ந்தாங்கு" (கலித். 25 : 4). 3. மிகுதல். “கதழொளி” (சீவக. 1749).
கதழ்வு = 1. கடுமை. 2. விரைவு (திவா.). 3. மிகுதி (திவா.).
“கதழ்வும் துனைவும் விரைவின் பொருள”(தொல். உரி. 17).
குல் - குன்- கன்- கனல் = நெருப்பு.
"உழிதரு காலுங் கனலும்”
(திருவாச. 5: 8).
கனலுதல் = = 1. எரிதல். “வேமிருந்தை யெனக்கனலும்” (கம்பரா. சூர்ப்ப. 118). 2. சுடுதல். “வயிற்றகங் கனலுஞ் சூலை” (பெரியபு. திருநா. 62). 3. கொதித்தல். "தீப்போற் கனலுமே” (நாலடி. 291). 4. சிவத்தல். ‘கண்கனன்று... நோக்குதலும்' (4. வெ. 6
5. சினத்தல். “மாமுனி கனல மேனாள்” (கம்பரா. நீர்விளை. 2).
23).
கனல்வு = சினம். "இங்குநின் வர வென்னவெனக் கனல் வெய்த” (கம்பரா. சூளா. 78).