4
குல் (எரிதற் கருத்துவேர்)
க.கனல், தெ. கனலு.
63
கனல்- கனலி கனலி = 1. நெருப்பு (திவா.). 2. கதிரவன். “வெங்கதிர்க்
கனலி” (புறம். 41 : 6).
கனல்
கனலோன்
கதிரவன். “காடுகனலக் கனலோன்
சினஞ்சொரிய” (பு. வெ. பொதுவியற். 10).
கனல்- கனற்று. கனற்றுதல் = 1. எரிவித்தல். “கலந்தவர்காமத்தைக் கனற்றலோ செய்தாய்" (கலித். 148). 2. சுடுவித்தல். வெயில் பிள்ளையுடம்பைக் கனற்றிவிட்டது (உ. வ.). 3. வெதுப்பு தல். “கனற்றக் கொண்ட நறவென்னாம்” (புறம். 384).
மிக விளங்குதல். “காதல் கனற்ற நின்றானும்” (தேவா. 696: 7). கனனிறக்கல் = மாணிக்கம். (W.).
குல் - குள்- கள்- காள்- காளம் = சுடுகை.
காளவாய் (காளவாசல்) = சுண்ணாம்புக்கல். சுடும் சுள்ளை. ம. காளவாய்.
காளவனம் = சுடுகாடு (சூடா.).
L. calor = heat, E. caloric.
L. calx, G. kalk, E. calc, OS. calc, E. chalk.
LL. calcina = lime, E. calcine to reduce to quicklime.
காள் - காழ் = 1. ஒளி (திவா.). 2. பளிங்கு (பிங்.). 3. முத்து. "பரூஉக்கா ழாரம்" (சிலப். 4 : 41). 4. மணி. 'பருக்காழுஞ் செம்பொன்னும்” (பு. வெ. 9 : 14). 5. மணிவடம். "முப்பத் திருகாழ்” (சிலப். 6: 87). 6. பூமாலை. “ஒருகாழ் விரன்முறை சுற்றி” (கலித். 54: 7). 7. நூற்சரடு. “திருக்கோவை காழ்கொள” (பரிபா. 6 : 15).
காழ்த்தல் = உறைத்தல் (திவா.). காழ்ப்பு = உறைப்பு (திவா.).
-
காழ் - காசு = 1. மணி. “நாண்வழிக் காசுபோலவும்” (இறை. 2, உரை). 2. மணிமேகலை. "பட்டுடை சூழ்ந்த காசு” (சீவக. 468). 3. பொன். (ஆ.நி.). 4. அச்சுத்தாலி. “காசும் பிறப்புங் கலகலப்ப” (திவ். திருப்பா. 7). 5. ஒரு பழைய பொற்காசு. 6. சிறு செப்புக்காசு. “நெஞ்சே யுனையோர் காசா மதியேன்” (தாயு. உடல் பொய். 72). 7. பணம். “எப்பேர்ப்பட்ட பல காசாயங்களும்”(S.I.I. Vol.I,89)
ம. காசு, வ. காச், E. cash.
காசு காசம் = 1. பளிங்கு. 2. பொன்.
காள்- கார். கார்த்தல் = உறைத்தல் (பிங்.).