உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 18.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68

வேர்ச்சொற் கட்டுரைகள்

8. அக்கரகாரம் (தைலவ. தைல, 112). 9. கோளக நஞ்சு (சங். அக.). 10. திருநீறு. “காரமென் றுரைப்பர்” (திருக்காளத். பு. 26 : 4). 11. சினம். அவன் என்மீது காரமாயிருக்கிறான் (உ. வ.).

ம. காரம், தெ. காரமு, க., து. கார.

காரச்சீலை, காரச்சேவு, காரத்துளி (பூந்தி), காரப்பசை, காரப்பொடி, காரமருந்து முதலியன வேகத்தையும் உறைப்பையு முடைய பொருட்பெயர்கள்.

காரம் = மிகுதி, கடுமை, வலிமை, உரிமை, பொறுப்புரிமை, வினையுரிமை, உறவுரிமை, உடைமை.

=

காரம் - காரன் = வலியன், உரியன், உடையான். காரி (பெ.பா.). வீட்டுக்காரன் என்பது உரிமையும், பணக்காரன் என்பது உடைமை யும், காவற்காரன் என்பது வினையுடைமையும் (குலப்பெயராயின் வினையுரிமையும்), அண்ணன்காரன் என்பது உறவுரிமையும் உணர்த்தும் பெயர்களாம். தோட்டக்காரன், வண்டிக்காரன், மாட்டுக் காரன் என்பன, உரியவனைக் குறிக்காவிடத்துப் பொறுப்புரிமைக் காரனைக் குறிக்கும். உரியவன்- சொந்தக்காரன்.

காரன் காரியீற்றுப் பெயர்கள் நூற்றுக்கணக்கின.

காரன்- வ. கார.

வடமொழியாளர் இவ் வீற்றை வடசொல்லாக்குவதற்கு, ‘க்ரு’ (செய்) என்னும் முதனிலையினின்று திரித்துச் செய்பவன் என்று பொருள் கூறுவர். ஆட்டுக்காரன், கோழிக்காரன், சொந்தக்காரன், தண்ணீர்க்காரன், நாழிமணிக்காரன், புள்ளிக்காரன், முட்டைக்காரன், வெள்ளைக்காரன் முதலிய பெயர்கட்குச் செய்பவன் என்னும் பொருள் பொருந்தாமை காண்க. வேலைக்காரன், கூலிக்காரன் என்பனவும், வினையுடைமையே குறிக்கும்.

செய்வானைக் குறிக்கும் வடமொழி யீறுகள், கார,காரு, காரி, காரின் (செய்பவன்), காரிணீ(செய்பவள்) எனப் பல வடிவில் நிற்கும்.

=

அதிகரித்தல் = மிகுதல். அதிகரி - அதிகாரம் = மிகுதி. வலிமை, உரிமை, நூற்பெரும் பிரிவு. அதிகாரம் - அதிகாரி, அதிகாரன். அதிகரி என்னும் வினைச்சொல் வடமொழியில் இல்லை. அதித்தல் = மிகுதல். அதி அதனம் = மிகுதி. இச் சொல்லும் வடமொழியில் இல்லை. அதிகரி என்பது ஒரு மீமிசைச் சொல்.