உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 18.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7

குல்° (துளைத்தற் கருத்துவேர்)

அடிக்கருத்துகளும் கிளைக் கருத்துக்களும்

.

குல் - குலை.குலைத்தல் = 1. கிளறிக் கலைத்தல். 2. கட்டுக் கோப்பைப் பிரித்தல். 3. பிரித்தல் அல்லது ஒற்றுமையைக் கெடுத்தல். 4. தாறுமாறாக்குதல். 5. அழித்தல்.

குலை கலை. கலைதல் = பிரிதல். கலைத்தல் = 1. கட்டுக் கோப்பைப் பிரித்தல். 2. கூட்டத்தைப் பிரித்தல். 3. பகைவரைச் சிதைத்தல். “பற்றலரைக் கலை....... வேந்தர்” (அஷ்டப். திருவரங் கத்தந். 25). 4. எண்ணத்தை அல்லது திட்டத்தைக் கெடுத்தல். இராவணனைக் கலைக்கின்றானே” (இராமநா. உயுத். 31). 5. பலகை யில் எழுதியதை அழித்தல். ம. கல.

குல்- குர்- குரல். ஒ. நோ : உல்- உர்- உரல்.

குரல் = 1. தொண்டைக் குழி (குரல்வளை). 2. தொண்டை (மிடறு). "மணிக்குரலறுத்து” (குறுந். 263). 3. தொண்டையில் எழும் ஒலி. 4. சொல். "யாவருந் தண்குரல் கேட்ப” (கலித். 142 : 9). 5. பாடும் இசை. “காமன் காமுறப் படுங்குர றருமிது ’” (சீவக. 1218). 6. ஏழிசை யுள் முதலாவது. “குரல் குரலாகத் தற்கிழமை திரிந்தபின்” (சிலப். 3: 85). 7. அஃறிணைப் பேச்சொலி. “சேவல் மயிற்பெடைக்குப் பேசுஞ் சிறுகுரல் கேட்டு" (நளவெண். சுயம். 41). 8. பறையோசை. "தாழ்குரற் றண்ணுமை” (சிலப். 3:27).

ம. குரல், க. கொரல், தெ. குர்ரு.

குல் - கல் - கலம் தோண்டப்பட்ட அல்லது குழிந்த ஏனம்.

கல் - கன் = 1. குழிந்த துலைத்தட்டு. 2. கலம். 3. கலத்தொழில். “மின்னும் பின்னும் பன்னும் கன்னும்” (தொல். 345).

கன்

கன்னான் = செப்புக்கலஞ் செய்பவன், செம்பு கொட்டி (திவா.). ம. கன்னான். ல்- ன். ஒ. நோ : ஒல்-ஒன். துல்- துன். கன்னுதல்