புல்® (துளைத்தற் கருத்துவேர்)
பாகம்- வ. பாக (bhaga).
வ.பாக
பாகு- பாகி. பாகித்தல் = பங்கிடுதல்.
137
திரிபாகி (முப்பாகி) = மூவெழுத்துகள் கொண்ட ஒரு சொல், அதன் முதலெழுத்தையும் இறுதி யெழுத்தையுஞ் சேர்க்க மற்றொரு சொல்லாகியும், இடையெழுத்தையும் கடையெழுத்தையும் சேர்க்க மற்றுமொரு சொல்லாகியும் வந்து, வெவ்வேறு பொருள் தருமாறு பாடப்படும் சொல்லணி (தண்டி).
இது முப்பாகியென்றிருத்தல் வேண்டும். திரி என்னும் வடமொழி எண்ணுப் பெயர், முப்புரியாகத் திரிக்கப்படும் நூல் அல்லது கயிறு என்னுங் கருத்தினின்றும் தோன்றியிருக்கலாம். ஏக என்னும் வடமொழி முதலெண்ணுப் பெயர், ஒக்க என்னும் தெலுங்குச் சொல்லினின்று தோன்றியிருத்தல் காண்க.
ஒக்க-எக்க-ஏக.
வடமொழியில் எகரக் குறிலின்மையால், எக்க என்பது ஏக (ஏக்க) என நீண்டது.
பாகு- பாகன் = 1. பக்கத்திலிருந்து பேணுபவன். 2. யானைப்பாகன். “யானை யறிந்தறிந்தும் பாகனையே கொல்லும்” (நாலடி. 213).3 வாதுவன் (குதிரைப் பாகன்). 4. தேரோட்டி. "தேரிற் பாகனா யூர்ந்த தேவதேவன்” (திவ். பெரியதி. 7:5:2). 5. அறிவன் (புதன்) (சூடா.).
ம. பாவான்., மரா. பாகா (g).
பாகன் பாகு = 1. யானைப்பாகன். “பாகு கழிந்தி யாங்கணும் பறைபட வரூஉம் வேக யானை” (சிலப் 15 : 46). 2. நடாத்துந் திறன். “போர்ப் பாகுதான் செய்து” (திவ். திருவாய். 4: 6: 3).
பாகம்- - பாகன் = ஒரு பாகமாகக் கொண்டவன். “நாரிபாகன்” (தேவா. 1172 : 9).
பாகு- பாக்கு = 1. பகுதி அல்லது பக்கம். 2. எதிர்கால வினையெச்ச ஈறு. உண்பாக்கு வந்தான் (இ.வ.). “வான்பான் பாக்கின வினையெச்சம்” (நன். 243). 3. தொழிற்பெயரீறு. “அஞ்சுதும் வேபாக் கறிந்து” (குறள். 1128).
பாக்கு - வாக்கு = 1. பக்கம். “இரண்டு கைவாக்கு மியங்கலிப்ப” பாக்கு-வாக்கு (திருவிளை. தடாதகை. 26). 2. இயங்கும் திசை. காயப்போட்ட துணி காற்றுவாக்கிற் பறந்துவிட்டது (உ.வ.). 3. உ.வ.).3.ஒரு வினையெச்ச ஈறு. "கொள்வாக்கு வந்தான்” (தொல். சொல். 231, உரை).