உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 19.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




138

வேர்ச்சொற் கட்டுரைகள்

=

பாக்கு - பாக்கம் = 1. நெய்தல் நகரப்பகுதி. எ - டு : டு : பட்டினப் பாக்கம், மருவூர்ப் பாக்கம் (காவிரிப்பூம்பட்டினப் பகுதிகள்). 2. நெய்தல் நிலத்தூர். “கொழும்பல்குடிச் செழும்பாக்கத்து” (பட்டினப். 27). 3. ஊர். “கட்கொண்டிக் குடிப்பாக்கத்து” (மதுரைக். 137), காவேரிப் பாக்கம். 4. அரசனிருப்பு (பதிற். 13 : 12, உரை).

பாக்கு - பாக்கை = 1. நெய்தல் நிலத்தூர். “நென்னலிப்பாக்கை வந்து” (பதினொ. திருவே. திருவந். 74). 2. ஊர். எ-டு: கொள்ளிப்பாக்கை.

பாக்கம்- வாக்கம் = 1. நெய்தல் நிலத்தூர். எ-டு: கத்திவாக்கம். 2. ஊர். எ-டு. வில்லிவாக்கம்.

பாக்கு- பாங்கு = 1. பக்கம். “காடுகொண் டலர்ந்த பாங்கெலாம்” (சூளா. நாட். 2). 2. உரிய இடம். “பட்டி மண்டபத்துப் பாங்கறிந் தேறுமின்” (மணிமே. 1: 61). 3. இன்கண் (பட்சம்). "வேந்த னொருவற்குப் பாங்கு படினும்” (யாப். வி. 96). 4. இணக்கம் (W.). 5. துணையான- வன் வள். "வேல்விடலை பாங்கா” (திணைமாலை. 87). 6. தோழமை. "நீயும் பாங்கல்லை” (திவ். திருவாய். 5 : 4 : 2). 7. ஒப்பு. “பாங்கருஞ் சிறப்பின்” (தொல். புறத். 23). 8. நன்மை. “பாங்கலா நெறி” (வாயுசங். இருடி. பிரம. 11). 9. அழகு. “பாங்குறக் கூடும் பதி”. (பு.வெ. 9 : 51, கொளு). 10. தகுதி. “பாங்குற வுணர்தல்” (தொல். உரி. 100). 11. இயல்பு (W.). 12. ஒழுக்கம். "பாங்குடையீர்” (திருவாச. 7:3).

ஒ.நோ: போக்கு- போங்கு.

பாங்கு - பாங்கன் = 1. தோழன். “பாங்கன் நிமித்தம் பன்னிரண் டென்ப” (தொல். களவு. 13). 2. கணவன். “பொருள்வயிற் பாங்கனார் சென்ற நெறி” (நாலடி. 400). 3. உழையன்.

ம. பாங்ஙன்.

ஒ.நோ: ME., OF; It. paggis, E. page.

பாங்கன்– பாங்கி = தலைவியின் தோழி. “பாங்கியிற் கூட்டம்” (நம்பியகப். அகத். 27).

பாகு - பாகை = 1. பகுதி (சூடா.). 2. (கணக்கு) வட்டத்தை முந்நூற்றறுபதாகப் பகுத்து வந்த பகுதி (யாழ். அக.). 3. கால அளவு வகை (W.). 4. வெப்பமானியின் அல்லது கண்ணாடிக் குப்பியின் அளவு வரை (degree).

பகு- பா. பாதல் = 1. பிளவுபடுதல். 2. பிரிவுபடுதல்.