உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 19.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




புல்® (துளைத்தற் கருத்துவேர்)

149

பள்- பழம்- பழமை = 1. தொன்மை. 2. தொன்மையானது. “பரமர் பழமை யெனலாம்....... மயிலாடுதுறை” (தேவா. 496 : 5). 3. வழங்கா தொழிந்தது (W.). 4. சாரமின்மை. 5. முதுமொழி (சூடா.). 6. பலநாட் பழக்கம். 7. நாட்பட்டதால் ஏற்படுஞ் சிதைவு. 8. பழங்கதை. 9. மரபு(W.). 10. வழக்கம்.

பழநடை = வழக்கம். 'பழநடைசெய் மந்திர விதியிற் பூசனை' (திவ். பெரியதி. 2 : 3 : 4). பழங்கணக்கு = 1. பழைய கணக்கு. 2. கடந்துபோன செய்தி.

பழங்கதை = 1. பழைய கதை. 2. தெரிந்த செய்தி.

பழங்காசு = பண்டை நாளில் வழங்கிய காசுவகை. பழங்கிடையன் = கட்டுக்கிடைப் பண்டம்.

பழஞ்சொல் = பழமொழி.

பழம் - பழன்- பழனம் = பண்டை நாளிலேயே பண்படுத்தப்பட்ட வயல். "பழன மஞ்ஞை யுகுத்த பீலி” (புறம். 13). 2. மருதநிலம். “பன்மலர்ப் பழனத்த” (கலித். 78). 3. பொய்கை. “பழன வாளைப் பரூஉக்கட் டுணியல்” (புறம். 61).

=

பழமை- பழைமை = தொன்மையானதாய் அல்லது நாட்பட்டதாய் இருத்தல்.க.பழவே.

பழை = பழங்கள் (பிங்.), கள்.

பழையன் = 1. முன்னோன். 2. கிழவன். 3. மோகூர்த் தலைவன் பெயர். 4. போரூர்த் தலைவன் பெயர்.

பழையர் = 1. முன்னோர். 2. கள் விற்போர். “பகன்றைக் கண்ணிப் பழையர் மகளிர்” (மலைபடு. 459).

பழையது = 1. நீரூற்றி வைத்த பழஞ்சோறு. 2. பழம்பொருள்.

ஒ.நோ: Gk. palaios, old, ancient, palaeocrystic, palaeography, palaeolithic, palaeontology, palaeothere, palaeozioc என்னுங் கூட்டுச் சொற்கள், palaios (பழைய) என்னுஞ் சொல்லை முதலுறுப்பாகக் கொண்டுள்ளன.

பழமை வழமை = வழக்கம். நாட்டு வழமை (உ.வ.). வழ - வழப்பு- வழப்பம் = வழக்கம் (யாழ். அக.). வழப்பு-வழப்பம்

கூர்மை.

பள்- பய்- பயில். ஒ. நோ : அள் = கூர்மை. அள்- அய்- அயில்

=