உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 19.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




150

=

வேர்ச்சொற் கட்டுரைகள்

பயில்தல் (பயிறல்) = 1. பழகுதல். 'பயிறொறும் பண்புடை யாளர் தொடர்பு.” (குறள். 783). 2. கற்றல். “படைக்கலம் யாவும்..... மாதவன் வயிற்பயில் வரதன்” (பாரத. வாரணா. 29). 3. தேர்ச்சியடைதல். 4. உலாவித் திரிதல். “நந்தி நந்தினி பயிலுகின்ற பேரொலி” (தணிகைப்பு. அகத். 103). 5. தங்குதல். “புலவர் பயிலுந் திருப்பனையூர்” (தேவா. 635: 6). 6. பொருந்துதல். 7. நெருங்குதல். “பயிலிதழ் மலர்" (கலித். 103).

பயில் - பயில்வு = இருப்பு, வாழ்வு. “அடிமைக்கட் பயிலாதார் பயில்வென்னே” (தேவா. 1063: 6).

பயில் – பயிற்சி = 1. தொழில் பழகுதல். 2. ஆட்பழக்கம்.

=

பயில்

பயிற்றி

=

பழக்கம். 'பழமையும் பயிற்றியும்.....

உடையார்” (இறை. 2).

பழையது- பழைது = 1. பழஞ்சோறு. 2. பழையது.

=

பழைது – பழைசு - பழசு - நாட்பட்டது. "தேன் அல்பமுமாய்ப் பழசுமாயிருக்கும்” (திவ். திருநெடுந். 26, வியா. 226).

பழஞ்சரக்கு

=

1. கட்டுக்கிடைப் பண்டம். 2. இன்று நுகரும் பழவினைப் பயன். “வறிதே தீயப் பழஞ்சரக்கும் ” (மதுரைக். 49).

=

பழையான் = 1. பழைமையானவன். “வானத்துயர் வானைப் பழையானை” (தேவா. 1064 : 9). 2. நெடுநாள் நண்பன். “பழையார்கட் பண்பிற் றலைப்பிரியாதார்” (குறள். 810).

பழையோள் = பழைமையான பாலைநிலத் தெய்வமாகிய காளி. இழையணி சிறப்பிற் பழையோள் குழவி” (திருமுருகு. 269).

பழம் - பழவு - பழகு. பழகுதல் = 1. நெடுங்காலமாக வழங்கி வருதல். "பழகுதமிழ்ச் சொல்லருமை நாலிரண்டில்” (தனிப்பா.). 2 பலநாட் பார்த்தல். பழகின முகம் (உ.வ.).3. உறவாடுதல்.

"நூறாண்டு பழகினும் மூர்க்கர் கேண்மை நீர்க்குட் பாசிபோல் வேர்க்கொள் ளாதே”

“ஒருநாட் பழகினும் பெரியோர் கேண்மை

இருநிலம் பிளக்க வேர்வீழ்க் கும்மே."

நறுந்.33)

(Mg 34)

4. விலங்கு பறவைகள் புதிய இடத்தில் அல்லது புதிய ஆள்களொடு பயின்று இணங்கிப்போதல். நாய் நன்றாய்ப் பழகிவிட்டது. எருமை ஏருக்குப் பழகிவிட்டது. (உ.வ.). 5. ஓர் உணவுப் பொருளைப் பலநாள்