உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 19.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




நுல்' என்னும் வேர்ச்சொல்

நீறு

நீற்று. நீற்றுதல்

=

9

1. பொடியாக்குதல். 2. சுட்ட

சுண்ணாம்புக்கல்லை நீரிற் கலந்து தூள் அல்லது களியாக்குதல். 3. மாழைகளை (உலோகங்களை)ச் சுட்டுச் சுண்ணமாக்குதல்.

நுறு- நுறுங்கு. நுறுங்குதல் = பொடியாதல். 2. சிதைதல். “நுறுங்கிய யாக்கையோடு” (விநாயகபு. 80: 442).

நுறுங்கு

குறுநொய். "நொய்யும் நுறுங்குங் களைந்து

அரிசியமைத்தாரை” (தொல். சொல். 1, உரை).

ம். நுறுங.

நுறுங்கு நறுங்கு. நறுங்குதல்

=

1. நொறுங்குதல். 2. தேய்கடையாதல். 3. வளர்ச்சி குறைதல். அவன் நறுங்கிப் போய்விட்டான் (உ.வ.). க. நலுகு (g).

நறுங்கு-நறுக்கு. நறுக்குதல் = 1. நொறுக்குதல். 2. துண்டித்தல். உன்னைக் கண்டங் கண்டமாய் நறுக்குகிறேன், பார்(உ.வ.).3. வெட்டுதல். “கைக் கத்திரிகையிட்டு நறுக்கின தலையாட்டத்தினை" (பு.வெ. 3 : 10, உரை). 4. கொட்டத்தை யடக்குதல்.

ம. நறுக்குக, தெ. நருக்கு, க.நரக்கு.

நறுக்கு = 1. துண்டு. 2. ஓலைச்சீட்டு. 3. இசைக்குழல் (நாதசுர) நாக்கு.

நுறு - நொறு - நொறுங்கு. நொறுங்குதல் = 1. பொடியாதல். 2. மனம் நொறுங்குதல் போல் வருந்துதல். மனம் நொறுங்குண்டது (உ.வ.).

.

நொறுங்கு = 1. நொய் (சூடா.). 2. தூள். “நொறுங்காய்க் கூடி யிட்டன கொடுமுடித் துறுகற்கள்” (சூளா. சீய. 145). 3. நுண்மை (W.).

நொறுங்கு - நொறுக்கு. நொறுக்குதல் = 1. பொடியாக்குதல். 2. மென்று தின்னுதல். 3. நையப் புடைத்தல். “வீரரை நொறுக்கி” (திருப்பு. 574). க. நுர்கு (g).

நொறுக்கரிசி

=

1. குத்தும்போது நொறுங்கிய அரிசி. 2. அரைவேக்காட்டுச் சோறு.

நொறுக்கல் நெல் = 1. அறுப்புக் காலத்தில் மழையாற் பதத்த நெல்.

நொறு - நொறுவை = பல்லால் நொறுக்கித் தின்னும் சிற்றுண்டி, சிற்றுண்டி.